491

83. கோடல் - வெண்கோடற்பூ,
கைதை - தாழம்பூ,
கொங்கு முதிர் நறு வழை - தாதுமுதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ,

84. காஞ்சி - காஞ்சிப்பூ,
மணி குலை கள் கமழ் நெய்தல் - நீலமணிபோலுங் கொத்துக்களையுடைய தேனாறும் கருங்குவளை,

85. பாங்கர் - 1ஓமை,
மராஅம் - மரவம்பூ (வெண்கடம்பு),
பல் பூ தணக்கம் - பல பூக்களையுடைய தணக்கம்பூ,

86. ஈங்கை - இண்டம்பூ,
இலவம் - இலவம்பூ,
தூங்கு இணர் கொன்றை - தூங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ,

87. 2அடும்பு - அடும்பம்பூ,
அமர் ஆத்தி - பொருந்தின ஆத்திப்பூ,
நெடு கொடி அவரை - நெடிய கொடியினையுடைய அவரைப்பூ, 

88. பகன்றை - பகன்றைப்பூ,
இது சிவதை ; 3" பகன்றைப்பூ வுறநீண்ட பாசிலைத் தாமரை" என்புழி வெள்ளிவட்டில் உவமைகோடலின், இது கிலுகிலுப்பையன்று.
பலாசம் - பலாசம்பூ,
பல் பூ பிண்டி - பல பூக்களையுடைய அசோகம்பூ,

89. வஞ்சி - வஞ்சிப்பூ, 
பித்திகம் - பிச்சிப்பூ, 
சிந்துவாரம் - கருநொச்சிப்பூ,

90. தும்பை - தும்பைப்பூ,
துழாஅய் - திருத்துழாய்ப்பூ,
சுடர்பூ தோன்றி - 4விளக்குப்போலும் பூவினையுடைய தோன்றிப்பூ,


1ஓமை - பாலைநிலத்திற்குரிய ஒருவகை மரம். பாங்கரென்று ஒரு வகையான கொடியும் உண்டு ; "பாங்கருமுல்லையுந் தாய பாட்டங்கால் - பாங்கர்க்கொடியும் முல்லைக்கொடியும் பரந்த தோட்டத்திடத்தே" (கலித். 111:3-4, ந.)

2அடும்பு - நெய்தல் நிலத்திற்குரிய ஒருவகைக் கொடி.

3கலித். 73:2. இதன் உரையில் நச்சினார்க்கினியர் பகன் றைப்பூவை, ‘மணமில்லாத பகன்றைப்பூ' எனக் குறிப்பிடுவர் ; பகன்றை யென்பது பெருங்கையாலென்னுங் கொடியென்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 13:155-60, உரை) ; இது மருதநிலத்துக்குரியதென்று தெரிகிறது.

4தோன்றி - செங்காந்தள் ; "ஒண்சுடர்த் தோன்றி" (ஐங்.)