506

யுடைய வளைந்த வாயையுடைய அன்றில் உயரும் பெரிய பனையில் உள் மடலிலேயிருந்து பேட்டையழைக்க,

221. பாம்பு மணி உமிழ - 1பாம்பு தான்மேய்தல் காரணமாகத் தன்னிடத்து மாணிக்கத்தை ஈன,

221-2. [பல்வயிற் கோவல, 2ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற :] கோவலர் பல் வயின் ஆம்பல் அம் தீ குழல் தெள் விளி பயிற்ற - இடையர் பல இடங்களினும் நின்று 3ஆம்பலென்னும் பண்ணினையுடைய அழகிய இனிய குழலிடத்துத் தெளிந்த ஓசையைப் பலகாலு மெழுப்ப,

223. ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட - ஆம்பலினது அழகிய இதழ்கள் தளையவிழ,

223 - 5. [வளமனைப், பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி, யந்தி யந்தண ரயர :]

அந்தணர் அந்தி அயர - பார்ப்பார் அந்திக்காலத்துச் செய்யுந் தொழில்களை நிகழ்த்த,

வளம் மனை பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி அந்தி அயர - செல்வத்தையுடைய மனைகளிற் பொலிவுபெற்ற தொடியினையுடைய மகளிர் விளக்கை அவ்விடத்தேகொளுத்தி அந்திக்காலத்திற் றொழிலை நிகழ்த்த,

225-6. கானவர் விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த - அக்காட்டில்வாழ்வார் விண்னணத்தீண்டுகின்ற பரணின்மேலே தீக்கடை கோலாலே நெருப்பைப்பிறப்பித்து எரிப்ப,


1 "அரா........உமிழ்ந்த, மேய்மணிவிளக்கின்" (அகநா. 72:14-5) என்பதன் உரையில், ‘மேய் மணி - மேய்தல் காரணமாக உமிழ்ந்த மணி ; விளக்கின் - அதுவேவிளக்காக' என்று அதன் உரையாசிரியர் எழுதியிருத்தலும் இச்செய்தியை யுணர்த்தும்.

2ஆம்பலந் தீங்குழலென்பதற்கு இங்கே உரை கூறியவாறே, "ஆம்பற்குழல்" (கலித். 108:62) என்பதற்கு, ‘ஆம்பலென்னும் பண்ணையுடைய குழலாலே' என்றும், "பையுள்செ யாம்பலும்" (சீவக. 1314) என்றவிடத்து, ‘ஆம்பல்-ஆம்பற்பண்ணையுடைய குழல்' என்றும் இவ்வுரையாசிரியர் எழுதுவர்; "ஆம்பலந் தீங்குழல் கோளாமோ" (சிலப். 17 : "பாம்பு") என்றவிடத்து, அரும்பதவுரை யாசிரியர், ‘ஆம்பன் முதலானவை சிலகருவி ; ஆம்பல் - பண்ணுமாம் : ‘மொழியாம்பல் வாயாம்பல் முத்தாம்பல்' என்று சொல்லுவர் பண்ணுக்கு' என்றும், அடியார்க்கு நல்லார், ஆம்பற்பண்ணென்பாரை மறுத்து வெண்கலத்தால் குமுதவடிவாக அணைசுபண்ணிச் செறித்த குழலென்றும் எழுதுவர்.

3ஆம்பலென்னும் பண் : "ஆம்பல்- ஆம்பலென்னும் பண்" (சீவக. 1662, ந.)