583
மிடனும் வலனு நினையினிர் நோக்கிக்
குறியறிந் தவையவை குறுகாது கழிமின்
கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்
கூடியத் தன்ன குரல்புணர் புள்ளி
270னாடுகா ணனந்தலை மென்மெல வகன்மின்
மாநிழற் பட்ட மரம்பயி லிறும்பின்
ஞாயிறு தெறாஅ மாக நனந்தலைத்
தேஎ மருளு மமைய மாயினு
மிறா அவன் சிலையர் மாதேர்பு கொட்குங்
275குறவரு மருளுங் குன்றத்துப் படினே
யகன்கட் பாறைத் துவன்றிக் கல்லென
வியங்க லோம்பிநும் மியங்க டொடுமின்
பாடி னருவிப் பயங்கெழு மீமிசைக்
காடுகாத் துறையுங் கானவ ருளரே
280நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள்
புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
யுண்டற் கினிய பழனுங் கண்டோர்
மலைதற் கினிய பூவுங் காட்டி
யூறு நிரம்பிய வாறவர் முந்துற
285நும்மி னெஞ்சத் தவலம் வீட
விம்மென் கடும்போ டினியி ராகுவி
ரறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு


268.கோளியாலம் : " கோளி யாலத்துக் கொழுநிழல் " (புறநா. 58 : 2)

முரஞ்சல் முதிர்வாகிய குறிப்புணர்த்தற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 35, இளம். தெய்வச். ந.

270. நாடு காணனந்தலை : " நாடுகா ணெடுவரை " (பதிற் 85 : 7)

275. " புளிஞரு மருளும் போக்கருஞ் சுரம் " (தணிகையாறு. 167) ; " குறவரு மருளுங் குன்றமொன்று " (குசேலோ. குசேலர் மேல். 39)

இவ்வடி, உம்மை உயர்வு சிறப்புப்பொருளில் வந்ததற்கு மேற்கோள் ; தொல். இடை. சூ. 7, இளம். சே. ந ; நன். சூ. 271, 424, மயிலை ; நன். வி. சூ. 425, இ - வி. சூ. 256.

278. " பாடின் னருவிப் பயங்கெழு மாமலை " (சீவக.2112)

286. இம்மென்கடும்பு : " இம்மென விமிரும் " (குறிஞ்சிப். 147)