460 | ஞெண்டாடு செறுவிற் றராய்க்கண் வைத்த விலங்க லன்ன போர்முதற் றொலைஇ வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத் துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேற லிளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர் | 465 | முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித் திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக் கண்டோர் மருளக் கடும்புட னருந்தி யெருதெறி களம ரோதையொடு நல்யாழ் | 470 | மருதம் பண்ணி யசையினிர் கழிமின் வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇச் செங்க ணெருமை யினம்பிரி யொருத்தல் கனைசெலன் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி வனைகலத் திகிரியிற் குமிழி சுழலுந் | 475 | துனைசெலற் றலைவா யோவிறந்து வரிக்குங் காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின் யாண ரொருகரைக் கொண்டனிர் கழிமி |
461. நெற்போருக்கு மலை : (பொருந. 244 ; பெரும்பண். 240 - 41, குறிப்புரை.) " போரொடு நிகர்வன புணர்மலை"(கம்ப. நாடு . 46) ; " தெரிந்திடும் போர்கள் ..........மேருவாயவே " (கந்த. நாடு. 22) ; " நெடுங்களத் தம்பொற் குன்ற நிரையெனப் பெரும்போர் செய்தார்"(திருவிளை. நாடு. 27)" வரைகளொப்பன போர் " (சீகாளத்தி.நக்கீர. 14) 463. துளங்குதசும்பு : " தசும்புதுளங் கிருக்கைத், தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் " (பதிற். 42 : 11 - 2) 464. இளங்கதிர் ஞாயிறு : மணி.பதிகம், 1) 467. மலைபடு. 319. 468. பொருந. 97. 469 - 70. நல்யாழ் மருதம்பண்ணி : (மலைபடு. 534 ; மதுரைக். 658) 471. " வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇ " (நற். 350 : 1 , புறநா. 348 : 1 ) ; " வெண்ணெ லரிநர் பின்றைத் ததும்புந், தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை " , " வெண்ணெ லரிநர் மடிவாய்த் தண்ணுமை ............படுபு ளோப்பும் " (அகநா. 40 : 13 - 4,204 : 10 - 11) 475.(பி-ம்.) ' இறந்து பனிக்கும் ' 476.கட்கின்சேயாறு : (மலைபடு. 555)
|