598
515காஅயக் கொண்டநுகமரு ணூறை
பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
குரூஉப்புலி பொருத புண்கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்த
520ணாகந் திலக நறுங்கா ழாரங்
கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி
திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்

517.புலி பொருத யானை : " பூம்பொறி யுழுவைப் பேழ்வாயேற்றை, தேங்கமழ் சிலம்பிற் களிற்றொடு பொரினே ", " கொன்முரணிரும்புலி யரும்புழைத் தாக்கிச், செம்மறுக் கொண்ட வெண்கோட்டியானை " , " புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்டு.........வேழம் ", " வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை " (நற். 104 : 1-2, 151 : 2-3, 202 : 1-4, 255 : 4) ; " சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கி " (குறுந். 88 : 2) ; " மறங்கொ ளிரும்புலித் தொன்முரண் டொலைத்த, முறஞ்செவி வாரணம் ", "புகர்முகக் களிறொடு புலிபொரு துழக்கும் ", " வாயிழி கடாத்த வான்மருப் பொருத்தலோ, டாய்பொறி யுழுவை தாக்கிய பொழுதின் ", " பெருங்களிற் றினத்தோடு வீங்கெருத் தெறுழ்முன்பி, னிரும்புலி மயக்குற்ற விகன்மலை " (கலித். 42 : 1-2, 45 : 12, 46 : 3-4, 48 : 6-7) ; " புலியொடு பொருது சினஞ்சிறந்து வலியோ, டுரவுக்களி றொதுங்கிய மருங்கில் ", " குயவரி யிரும்போத்துப் பொருத புண்கூர்ந், துயங்குபிடி தழீஇய மதனழி யானை " (அகநா. 291 : 6-7. 398 : 22-3) ; " வரிவயம் பொருத வயக்களிறு " (புறநா. 100 : 7)

517-8. யானை முத்துடை மருப்பு : (முருகு. 304- 5 ; குறிஞ்சி. 35-6) ; " முத்துடை மருப்பின் மழகளிறு " (பதிற். 32 : 3 " முத்தார் மருப்பின் "(கலித். 40 : 4) ; " வைந்நுதி வான்மருப் பொடிய வுக்க,தெண்ணீ ராலி கடுக்கு முத்தமொடு "(அகநா. 282 : 6 - 7) ; " துடியடியளக்கர்நிரையே துணிபடுபிறக்கநடு வொடிமடிமருப்பிணைகள் சொரி குருதி முத்த நினையோம் " (குலோத். பிள்ளை. முத்தப். 8)

519." கோடல் வீயுகு பவைபோ, லிலங்கே ரெல்வளை " , " ஊழுறு கோடல்போ லெவ்வளை யுகுபவால் ", " ஊழுற்ற கோடல்வீ, யிதழ் சோருங் குலைபோல விறைநீவு வளையாட்கு " (கலித். 7 : 15-6, 48 : 11, 121 : 13-4) ; " உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் " (புறநா. 90 : 1) ; " துணைமலர்க் காந்த ளுழ்த்துச் சொரிவபோற் றோன்றி முன்கை, யணிவளை நலத்தேடேங்க " (சீவக. 1742)

522. மலைபடு. 171, குறிப்புரை.