மாலையாற் பொலிவுபெற்ற வண்டுகளைஉண்டாக்குகின்ற மார்பினையுடைய கணவன் (58) என்க. 57. வனை புனை எழில் முலை- ஓவியங்களிலே முலையாகப் பண்ணின கைசெய்த அழகைத் தன்னிடத்தேயுடையமுலையினையும், வாங்கு அமை திரள் தோள் - வளைந்தமூங்கிலையொத்த திரண்ட தோளினையும், 58. மலர் போல் மழை கண் 1மங்கையர்கணவன் - பூப்போலும் குளிர்ச்சியையுடைய கண்ணினையுமுடையகற்புடை மகளிர்க்குக் கணவன். 59. முனை பாழ் படுக்கும் துன்அருதுப்பின் - பகைப்புலத்தைப் பாழுண்டாக்கும் கிட்டுதற்கரியவலியினையும், 60. [ இசைநுவல் வித்தி னசையேருழவர்க்கு] நுவல் இசைவித்தின் நசை ஏர் உழவர்க்கு- தாம் பிறரைக்கூறும் புகழாகிய விதையாலேபிறர்பொருள்களை நச்சுதலாகிய ஏருழவினையுடையபரிசிலர்க்கு, என்றது , புகழைவித்திப்பொருளையெடுப்பரென்றவாறு. 61. புது நிறை வந்த புனல் அம் சாயல்- புதுப்பெருக்காய்வந்த நீர்போலும் அழகையுடைய மென்மையினையும், என்றது, தண்ணீர் அரியகாலத்தேவந்துபயன்தருமாறுபோல இவனும் பயன்றருவனென்றவாறு. 62. மதி மாறுஓரா நன்று உணர் சூழ்ச்சி- தனதறிவின் ஆக்கத்திற்கு மாறாகிய கேட்டை நினையாதுஆக்கத்தினையேயுணரும் நினைவினையும், 63. வில் நவில் தட கை -விற்றொழிலிலே பயின்ற பெரிய கையினையும், மேவரும் பெரும்பூண் - பொருந்துதல்வரும் பேரணிகலங்களையுமுடைய, 64. நன்னன் சேய் நன்னன் படர்ந்தகொள்கையொடு - நன்னன் மகனாகிய நன்னனை நினைத்தகோட்பாட்டுடனே, துப்பினையும் (59) சாயலினையும் (61)சூழ்ச்சியினையும் (62) கையினையும் பூணினையும் (63)உடைய நன்னனென்க. 65. உள்ளினிர் சேறிராயின் - அவன்தரும் பரிசில்கள் இவையென்று அப்பரிசில்களை உள்ளினிராய்நீயிரும் (53) செல்வீராயின், 65- 6. [பொழுதெதிர்ந்த,புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலின் :] என் தாக்குறுதலின்எதிர்ந்த பொழுது புள்ளினிர் மன்ற-
1 மக்களுட் பெண்பாலாரைப்பாடுதல்சிறப்பின்மையின் இவ்வாறு கணவரோடு சேர்த்துப்பாடுதல் மரபென்பர் : தொல். புறத்திணை. சூ. 26,ந.
|