தசையாகிய உணவை முழுதுந் தின்னாமல்மிகுத்துவைத்துக் கட்டிக் கொண்ட பொதியின்சுமையினையுடையிராய், 253. புள் கை போகிய 1 புன்றலைமகாரோடு - வளை கையினின்றும் போதற்குக் காரணமானசிவந்த தலையினையுடைய பிள்ளைகளோடே, 2பிள்ளையைப் பெற்றால்வளையிடாராகலின், வளைபோதற்குப் பிள்ளைகள் காரணமாயினார். 254 - 5. [ அற்கிடை கழித லோம்பியாற்றநு, மில்புக் கன்ன கல்லளை வதிமின் :] இடை கழிதல்ஓம்பி ஆற்ற நும் இல் புக்கன்ன கல்அளை அற்கு வதிமின்- அவ்விடத்துப் போதலைப் பரிகரித்து வழியிடத்தனவாகியநும் இல்லிலே புக்காலொத்த கன்முழைஞ்சுகளிலே இராக்காலத்துத்தங்குவிர் ; இஃது அசையுநற்புலமும் (67) வல்சியும்(68) சேரக்கூறிற்று. கானத்துப்படின் (242) மிசைந்து (249)பருகிப் (251) பொதியினிராய் (252) மகாரோடே (253) கழிதலோம்பி அதற்கு (254) வதிமின் (255) என்க. 256. அல் சேர்ந்து அல்கி அசைதல்ஓம்பி - இராக்காலத்திற்கு எல்லாருங்கூடித் தங்கிஇளைப்பாறி, 257. வான் 3 கண் விரிந்தவிடியல் ஏற்றெழுந்து - வானிடத்தே ஞாயிற்றின்கதிர்விரிந்த விடியற்காலத்தே துயிலுணர்ந்தெழுந்து, 258. கான் அகப்பட்ட செ நெறி கொண்மின்- காட்டிடத்தே கிடந்த செவ்விய நெறியைப் போவீராக; 259 - 65. [ கயங்கண் டன்ன வகன்பை யங்கண்,மைந்துமலி சினத்த களிமறுமத னழிக்குந், துஞ்சுமரங்கடுக்கு மாசுணம் விலங்கி, யிகந்துசேட் கமழும் பூவு முண்டோர், மறந்தமை கல்லாப் பழனு மூழிறந்து, பெரும்பயங் கழியினுமாந்தர் துன்னா, ரிருங்கால் வீயும் பெருமரக்குழாமும் :] அகல் பை அம் கண் (259) மைந்து மலிசினத்த களிறு மதன் அழிக்கும் (260) 4 துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி (261) - அகன்ற
1 பட்டினப். 90, ந. 2 ( பி - ம்.) ' பிள்ளைப் பேற்றால்' 3 உலகிற்குக் கண்ணாதலின் சூயரினைக் கண்ணென்றார் ; " வான்கண் விழியா " (சிலப்.10 : 1) என்றவிடத்து வான்கணென்பதற்கு ஆதித்தனென்று அரும்பதவுரையாசிரியரும் உலகிற்குக் கண்ணாகிய ஆதித்தனென்று அடியார்க்குநல்லாரும் எழுதியிருப்பனவும், " எண்ணுக்குவரும்புவனம் யாவினுக்குங் கண்ணாவா னிவனே யன்றோ" (வி. பா. அருச்சுனன்றவநிலை. 43) என்பதும் இங்கேஅறிதற்குரியன. 4 துஞ்சுதல் தூங்குதலாதலின் அஃது இங்கேவிழுந்துகிடத்தலாயிற்று.
|