பக்கம் எண் :

1
பத்துப்பாட்டு
நச்சினார்க்கினியருரை
முதலாவது
திருமுருகாற்றுப்படை
திருப்பரங்குன்றம்


உலக முவப்ப வலனேர்பு திரிதரு
(குறிப்புரை)

1.நூல்களின் முதலில் மங்கலமொழிகளுள் உலகமென்பதைத் தனித்தேனும் அடைமொழியுடன் சேர்த்தேனும் அமைத்தலும் அதன் பரியாயமொழிகளை அவ்வாறே அமைத்தலும் மரபு. அவற்றுட் சில வருமாறு:- "உலகந் திரியா" (மணி. 1:1) ; "உலகமூன்றும் " (வளையா. கட.) ; "உலகெலா முணர்ந்து " (பெரிய. கட. 1); உலகம் யாவையும்" (கம்ப. கட. 1). இவற்றில், உலகமென்பது தனித்து வந்தது.

"நனந்தலை யுலகம் " (முல்லை. 1) ; "ஆர்கலி யுலகத்து" (முது. 1 : 1); "மூவா முதலா வுலகம்" (சீவக. 1); "அலையார்ந்த கட லுலகம்" (ஆளுடைய. கலம்.1); "மலர்தலை யுலகத்து" (நாற். 1); "நீடாழி யுலகத்து" (வில்லி. கட. 1). இவற்றில், உலகமென்பது அடையடுத்து வந்தது.

"வையகம் பனிப்ப" (நெடு. 1); "பார்மண் டலத்தினில்" (ஆளுடைய. திருவந். 1). இவற்றில், உலகமென்பதன் பரியாயமொழிகள் தனித்து வந்தன.

"மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை" (சிறுபாண். 1); "மாநிலஞ் சேவடி யாக" (நற். கட. 1); " கண்ணகன் ஞாலம்"