பக்கம் எண் :

129
மூன்றாவது



1சிறுபாணாற்றுப்படை


மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
5புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
லயிலுருப் பனைய வாகி யதுநடந்து

1இந்நூல் பாணாற்றுப்படைக்கு மேற்கோள்; தொல். புறத். சூ. 36, ந.

1 மணிமலை: "மணி நெடுங்குன்று" (குறுந.் 240 : 7; ஐங். 207 : 4, 209 : 5); "மணிவரை" (ஐங் 250 : 2; பரி, 13 : 1; பரி. 169 : 3.)

2.(பி-ம்) ‘துயல்வரும்'

2 - 3. ஆற்றிற்கு ஆரம்: "செய்யவ ளணியகலத் தாரமொ டணி கொள்பு.......வையைவா ரவிரற லிடைபோழும்" (கலித். 28 : 5 - 7); "மாயோன் மார்பி லாரம் போல, மணிவரை யிழிதரு மணி கிள ரருவி" (தொல். செய். சூ. 78. பேர். மேற்.); "இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின்மேல், விளங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை" (சீவக. 35); "காவிரி, மாதர்மண் மடந்தைபொன் மார்பிற் றாழ்ந்ததோர், ஓதநீர் நித்திலத் தாம மொக்குமால்" (பெரிய. திருநாட்டுச். 2); "பேரார நிபுட மாலை மால்யாறு நிமிர வீழ்வ போல்வீழ", "நதிக்குப் போத வொழுகுமுத் தாரமும்" (தக்க. 106, 280)

1 - 3."அலைநீ ராடை மலைமுலை யாகத், தாரப் பேரியாற்று மாரிக் கூந்தற், கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை" (சிலப். 5 : 1 - 3)

6.கூந்தலுக்கு அறல் உவமை: "அறலார் குழலை யறியேனெனல்" (ஒரு பழைய இலக்கணநூல்)

3 - 6. பரி. 10 : 30; அகநா. 11 : 8 - 11; புறநா. 198 : 1 - 2.

5 - 6. "பொன்னிதழிற் பைந்தாதும் போதும் புறம்புதைத்த, வின்னறல்போ லேழை யிருங்கூந்தல்" (கண்டனலங்காரம்)

7. (பி-ம்.) ‘அயிலுருக்கனையவாகி', ‘அயிலுருத்தனையவாகி'