பக்கம் எண் :

176

குறடு - அச்சுக்கோக்குமிடம். அயில்வாய் - கூரியவாய் ; என்றது சூட்டிற்கு ஆகுபெயர்.

254 - 5. [சிதர்நன முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத், ததர் பிணி யவிழ்ந்த தோற்றம் போல:] முருக்கின் சேண் ஓங்கு நெடு சினை ததர் நனை சிதர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல - முருக்கினுடைய விசும்பிலே செல்ல வளர்ந்த நெடியகொம்பிற் செறிந்த அரும்புகள் வண்டிற்குப் பிணியவிழ்ந்த தோற்றரவுபோல,

ததர்: கொத்துமாம். சிதர்: சிந்தலுமாம்; சிச்சிலியுமாம்.

256 - 8. [உள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக் கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி, யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு:]

கரு தொழில் வினைஞர் கைவினை முற்றி (257) உருக்குறு அரக்கு உள் எறிந்த போர்வை (256) பாகர் (258) - வலிய தொழிலைச்செய்யுந் தச்சருடைய கையாற் செய்யும் உருக்களெல்லாம் முற்றுப்பெற்று உருக்கப்படுஞ் சாதிலிங்கம் உள்ளே நிரம்ப வழித்த பலகையையுடையபாகர்,

தேர்த்தட்டு வெளிமறையப் பாவின பலகையைப் போர்வை யென்றார். அதன் மேலே சுற்றிச்சுவராகப் பலகையாற்செய்த சுவரைப் பாகரென்றார். பாகரையுடைய தேரைப் பாகரென்றார், ஆகுபெயரால்.

ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு (258) - ஏறிப் பார்த்து உண்மையாக ஓட்டமுண்டென்று பெயர்பெற்ற அழகினையுடைத்தாகிய நடையினையுடைய தேரோடே,

நேமியோடே (253) போர்வையையுடைய (256) பரகரென முடிக்க.

259 - 60. மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன்றாள் வாள் முகம் பாண்டில் - தன்கடுமையாற் குதிரையின்செலவைப் பின்னே நிறுத்தும் வனப்புடைத்தாகிய வலியினையுடைய தாளினையும் ஒளியினையுடைத்தாகிய முகத்தினையுமுடைய நாரையெருத்தையும்,

260. வலவனொடு - அதனைச்செலுத்தும் பாகனோடு,

261 - 61. [தரீஇ, யன்றே விடுக்குமன் பரிசில்] பரிசில் தரீஇ அவன் அன்றே விடுக்கும் - யானை குதிரை அணிகலம் முதலிய பரிசில்களையும் தந்து அவன் அன்றே விடுக்கும்;

நிதியத்தோடே (249) பாகரோடே (258) வலவனோடே பாண்டிலையும் (260) பரிசிலையுந் (261) தரீஇ (260) அவன் அன்றேவிடுக்குமென முடிக்க.

261 - 3. மெல் தோள் துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் அகில் உண விரித்த அம் மெல் கூந்தலின் - மெல்லிய தோளினையும்,