வழியிற் பெறுமவற்றை யாங்கூறக்கேண்மிண்; பட்டினம் படரின் (153) வயின் வயிற்பெறுகுவிர் (163); அதன்பின்னர் வேலூ ரெய்தின் (173) அமைவரப் பெறுகுவிர் (177); அதன்பின்னர் அவன் ஆமூரெய்திற் (188) கலவையொடுபெறுகுவிர் (195); அவற்றைப் பெற்ற பின், அவன் மூதூர் (201) சேய்த்துமன்று; சிறிது நணியதுவே யாயிருக்கும் (202); ஆண்டுச் சென்று முன்னர் அவன் கடைவாயிலைக் குறுகிப் (206) பின் அறிந்தோரேத்த (209) வயவரேத்த (212) அரிவையரேத்தப் (215) பரிசிலரேத்த (218) இருந்தோனை யணுகிப் (220) பாடுதுறைமுற்றுதற்கு (228) இன்னியத்தைப் (229) பண்ணிக் (230) கையினையென்றும் (231) மார்பினையென்றும் (232) கோலினையென்றும் (233) வேலினையென்றும் (234) நீ சிலமொழியா அளவை (235) அவன் (261) நீவிரும்புவனபேணி (244) உடீஇ (236) நல்கி (237) அடிசிலைக் (241) கலத்தேயிட்டுத் (244) தான்நின்று ஊட்டி (245) நிதியத்தோடே (249) பாகரோடே (258) வலவனோடே பாண்டிலையும் (260) பரிசிலையும் (261) தரீஇ (260) அன்றேவிடுக்கும் (261) என வினைமுடிவுசெய்க. 1 ஓய்மானாட்டு (பி-ம். ஏறுமாநாட்டு) நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று. வெண்பா | 1 | அணியிழையார்க் காரணங் காகிமற் றந்நோய் தணிமருந்துந் தாமேயா மென்ப-மணிமிடைபூண் இம்மென் முழவி னெயிற்பட் டினநாடன் செம்மல் சிலைபொருத தோள். |
2 | நெடுவரைச் சந்தன நெஞ்சங் குளிர்ப்பப் படுமடும் 2 பாம்பேர் மருங்குல்- 3இடுகொடி 4ஓடிய 5மார்ப னுயர்நல் லியக்கோடன் 6சூடிய கண்ணி சுடும். |
1 ‘ஓய்மான் நல்லியக்கோடன்' என்றும் இவன் வழங்கப்பெறுவன்; (புறநா. 176) 2 (பி-ம்.) ‘பாம்போர்', ‘பாம்பேய்' 3 (பி-ம்.) ‘இடுகிடையாய்' 4 (பி-ம்.) ‘ஓட்டிய' 5 (பி-ம்.) ‘மார்பின்' 6 (பி-ம்) ‘சூட்டிய'
|