பக்கம் எண் :

179
நான்காவது
1பெரும்பாணாற்றுப்படை

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி

1பெரும்பாணர் - குழலர் பாணர் முதலாகிய பெரிய இசைக்காரர் (சிலப். 5 : 37, அடியார்): "பெரும்பா ணிருக்கையும்" (மதுரைக். 342): "பெரும்பாண் காவல் பூண்டென" (நற். 40 : 3)

இந்நூலின் பெயர் பாணாறு எனவும் வழங்கும்; (தக்க. 562), உரை,

1. நாற்சீரடி பதின்மூன்றெழுத்தால் வந்ததற்கும் (தொல். செய். சூ. 50, இளம்.), நேரும் நிரையுமொன்றி நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளை ஆயதற்கும் (தொல். செய். சூ. 56. பேர். ந.) இவ்வடி மேற்கோள்.

2. "கல்சேர்கையினாலே இருள் வாராநிற்க அது பொறாது மதி தோன்ற என ஒரு வினையாக முடிக்க; ‘பகல் கான் ....... பருதி' என்றார் பிறரும்" (கலித். 119. ந.): "கதிர் காற்றியும்-கிரணங்களைக் கக்கியும்" (கல். "நண்ணியபாதி" மயிலேறு,) என்பதற்கும், "கான்று என்னுமிடக்கர் அணிகுறித்துப் பிறிதொரு பொருண்மேல் நிற்றலின் மறைக்கப்படாது; தன் பொருண்மேல் நின்றுழி மறைக்கப்படும்" (தொல். எச்ச. சூ. சே. 47, ந. : நன் - வி. சூ. 267 ; இ. வி. சூ. 168. உரை ; நன், சூ. 267, இராமாநுச.) என்பதற்கும் இவ்வடி மேற்கோள்.

1 - 2, "வெயில்கான் றிருள்சீத்தெழு வெங்கதிர்ச் செல்வன்" (கூர்ம. இராவணவதை. 17): திணைமா. 94.

அடியெதுகைக்கும் வழக்கொடுபட்ட மரபு பிறழவும் செய்யுளின் பம்படின் அவ்வாறு செய்க (தொல். செய், சூ. 93, மேற்படி. மரபு. சூ. 1, பேர்.) என்பதற்கும், செய்தென்னும் வாய்பாடு செய்யாநின்றெனச் சிறுபான்மை நிகழ்காலப் பொருளிலும் வரும் (தொல். வினை. சூ. 31. ந; இ-வி, 246, உரை கல் "பாய்திரை", "கண்ட காட்சி" மயிலேறு.) என்பதற்கும், கட்டளையடிச் சீர்வகையடிதொடுத்த அடியெதுகைக்கும் (தொல். செய். சூ, 93, ந,), சமாதியென்னுமலங்காரத்திற்கும் (தண்டி. பொது. 25; இ - வி. சூ. 635) இவ்