பக்கம் எண் :

180
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி
5வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத
னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்
10 சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப்
பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின்
மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற்
15பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ


வடிகள் மேற்கோள்; விட்டும்விடாத இலக்கணைக்கு இவ்வடிகள் உதாரணமாகக் காட்டப்படும்;(நன். சூ. 269), இராமாநுச,

"உயிருண்ணவும் பருகவும் படுவதன்றாயினும் அவ்வாறு கூறுதல், ‘அகலிரு......பருதி' என்றாற்போல ஓரணி குறித்து நின்றது"(புறநா. 230, விசேடவுரை)

3. காய்சினந்திருகிய: "கடுஞ்சினந்திருகி" (மணி. 22 : 157)

4. (பி-ம்.) ‘ஒழிந்த பராஅரை'

5.(பி-ம்.) ‘வகிர்ந்ததன்'

5-6. (பி-ம்.) ‘வைத்ததனுள்ளம்'

7. (பி-ம்.) ‘பாளையின் பசும்பூ', 'பாளையின் பசுங்காய்'

8. (பி-ம்.) ‘சிறுதுளை'

7 - 8. அன்ன : மெய்யுவமவுருபு, தொல். உவம. சூ. 13. இளம். மேற்.

9. "விசியுறு போர்வை" என்பதற்குத் தெரியாமற் போர்த்த போர்வை யெனப் பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர்: சீவக, 559, ந.

10. வறுவாய்: பொருந. 12.

13. ஏய்க்குமென்பது உவமவுருபு(தொல். உவம. சூ. 17. இளம்,) என்பதற்கும், வினையுவமவுருபு(தொல். உவம, சூ. 12. பேர்,) என்பதற்கும் இவ்வடி மேற்கோள்.

12 - 3. பொருந. 14 - 5; மலைபடு. 21.

15 - 6.சிறுபாண். 34 - 5-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.