பக்கம் எண் :

261

தங்கிச் (44) சென்மோ (45) ; அங்ஙனஞ்செல்லூங்கால் வில்லுடைவைப்பிற் (82) குரம்பையில் (88) எயிற்றியர் (94) தாங்களட்ட புழுக்கலையும் வாடூனையும் (100) எல்லிடைக்கழியுநர்க்கு ஏமமாகத் (66) தேக்கிலையிலே குவிக்கையினாலே (104) அப்பதத்தைப் (105) பெருமகனாகிய (101) வரைநாடான் சென்னியமெனிற் (103) கடும்போடே மிகப்பெறுகுவிர் (105) ; பின்னர் அருஞ்சுரமிறந்த அம்பர்க் (117) குறும்பிற் சேப்பின் (129) சொன்றியை (131) வறைகால்யாத்தது வயின்றொறும் பெறுகுவிர் (133) ; பின்னர்த் தூங்கா (146) முரண்டலை (147) யிருக்கை (146) கழிந்தபின்றைக் (147) குடிவயிற்சேப்பின் (166) மூரல் பாலொடும் பெறுகுவிர் (168) ; பின்னர்ப் பறவையோர்க்கும் (183) புலத்தைப் போய்ச் (184) சீறூர்களிலே (191) வரகின் சொன்றியைப் (193) புழுக்கையட்டி (195) மூரலோடே பெறுகுவிர் ; பின்னர் ஞாங்கர் (196) வன்புலமிறந்தபின்றை (206) ; மல்லற்பேரூர்மடியின் (254) வல்சியை(255)வாட்டொடும் பெறுகுவிர்(256) ; பின்னர்க்கரும்பின்றீஞ்சாறுவிரும்பினிர் மிசைமின் (262) பின்னர் வலைஞர் குடிவயிற் சேப்பின் (274) பிழியைச் (281) சூட்டொடு பெறுகுவிர் (232) ; பின்னர்த் தீப்பட மலர்ந்த (289) பூவையோம்பிக் (290) குறுநரிட்டமலரைப் (295)பிணையினிர்கழிமின் (296) ;பின்னர்மறைகாப்பாளர் உறைபதிச்சேப்பின் (301) வத்தத்தாலுண்டான அரிசியை (305); வளைக்கைமகடூஉ வயினறிந்தட்டனவற்றைச் (304) சுடர்க்கடையிலே (305) போழோடே (307) காடியோடே பெறுகுவிர் (310) ; பின்னர் நீர்ப்பெயற்றெல்லை போகிப் (319) பட்டினமருங்கினசையின் முட்டுப்பாடின்றாகக் (336) கொழுநிணத்தடியொடு கூர்நறாப்பெறுகுவிர் (345) ; பின்னர்த் துறை பிறக்கொழியப்போகித் (351) தனிமனைச்சேப்பின் (355) ஆண்டைத் தீம்பஃறாமுனையிற் சேம்பிலையோடே (361) முதிர்கிழங்கார்குவிர் (362) ; இவற்றை இவ்வழியின் கண்ணே பெற்றுப் பின்னர்ப் பன்மர நீளிடைப்போய் (368) நாடுபலகழிந்தபின்றைப் (371) பள்ளி யமர்ந்தோன் ஆங்கட் (373) பொழிறொறும் (380) ஆடி (387) அசைஇத் (390) தொலைச்சி (382) மரீஇக் (383) கடவுள்வாழ்த்தி (391) இயக்கினிர் கழிமின் (392) ; இங்ஙனஞ்சென்று கைவண்டோன்றல் (420), இப்பொழுது ஐவர்போலக் (417) குருதியீர்ப்பப் (414) பொருது (415) ஆர்த்துப் (419) பகைமேற் செல்லுதலின்றிநச்சிச்சென்றோர்க்கு ஏமமாகிய (421) படப்பை முதலியவற்றையுடைய (401) விழவு மேம்பட்ட மூதூராகிய (411) கச்சியிடத்தே யிருந்தோன் (420), அவ்வூரிற் பணிந்த மன்னர் (428) செவ்விபார்க்கும் முற்றத்தினையுடைய (435) பொன்றுஞ்சு வியனகர்க்கண்ணே (440) பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (442) மிக்ககாட்சியாலே (445) அருளிப் (444) பூண்கடனாற்றிக் (450) கடனிறுத்த உள்ளத்தோடே (446) சுற்றத்தோடே இருந்தோனைக் குறுகித் (447) தொண்டையோர் மருகனே (454), மள்ளனே, மறவனே (445), செல்வனே, செருமேம்படுநனே (456), பெருமானே (461), செல்விக்கு அணங்கு