ஆறாவது
1மதுரைக் காஞ்சி
| ஓங்குதிரை வியன்பரப்பி னொலிமுந்நீர் வரம்பாகத் தேன்றூங்கு முயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலத்து | 5 | வலமாதிரத்தான் வளிகொட்ப வியனாண்மீ னெறியொழுகப் பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு மிரவுச்செய்யும் வெண்டிங்களு மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க |
1வீடு பேறு நிமித்தமாகச் சான்றோர் பல்வேறு நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி காஞ்சித்திணைக்கு உதாரணமென்பர்; தொல். புறத். சூ. 23, ந. 1. நேர்புநிரையாகிய ஆசிரியவுரிச்சீர் வஞ்சியுள் வந்ததற்கும் (தொல். செய். சூ. 14, பேர்.), குறளடிக்கும் (தொல். செய். சூ. 40. ந.) இவ்வடி மேற்கோள். 1-2. வழிமோனைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ. 94, பேர். 3. (பி-ம்.) ‘தூங்கியவுயர்' தேன் தூங்குமுயர்சிமையம் : "பிரசந் தூங்கு மலைகிழவோற்கே" (குறுந். 392:8) ; "பிரசந் தூங்கு சேட்சிமை, வரை" (அகநா. 242 : 21-2) 4. "மாமலை ஞாறிய ஞாலம்" (பரி. "வானாரெழிலி") ; "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே" (பு. வெ. 35) 3-4. இவ்வடிகள் பதினெட்டெழுத்தான் வந்தனவென்பர் ; தொல். செய். சூ. 50, இளம். 1-4. யா. வி. செய். சூ. 2, மேற். 5. "வளிவலங் கொட்கு மாதிரம் வளம்படும்" (மணி. 12 : 91) சிந்தடியென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். செய். சூ. 38, ந. 7-8. பெரும்பாண். 442-இன் உரையையும் குறிப்புரையையும் பார்க்க. முரணிரனிறைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; யா. வி. சூ. 95, உரை
|