பக்கம் எண் :

291
றொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந
விழுச்சூழிய விளங்கோடைய
கடுஞ்சினத்த கமழ்கடாஅத்
45தளறுபட்ட நறுஞ்சென்னிய
வரைமருளு முயர்தோன்றல
வினைநவின்ற பேர்யானை
சினஞ்சிறந்து களனுழக்கவு
மாவெடுத்த மலிகுரூஉத்துக
50ளகல்வானத்து வெயில்கரப்பவும்
வாம்பரிய கடுந்திண்டேர்
காற்றென்னக் கடிதுகொட்பவும்
வாண்மிகு மறமைந்தர்
தோண்முறையான் வீறுமுற்றவு
55மிருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்

40-42. "மறைமுது முதல்வன் பின்னர் மேய, பொறையுயர் பொதியிற் பொருப்பன்" (சிலப். 12 : இறுதிப்பகுதி)

44. யானைமதம் கமழ்தல் : "குதிபாய் கடாம், மதகோடி யுல கேழு மணநாற" (தக்க. 3) என்பதன் விசேடக்குறிப்பைப் பார்க்க ; "மாவ தத்தினை யிழைத்திடும் பூட்கையின் மதநீர், காவ தத்தினுங் கமழ்தரு கலிங்கநாடு" (கந்த. மார்க்கண்டேயப். 114)

45. (பி-ம்.) ‘அயறுபட்டநறுஞ்'; புறநா. 22:7

46. பெரும்பாண். 352 ; புறநா. 38:1, 42:1.

47. "தொழினவில்யானை" (பதிற். 84:4)

44-7. கடுஞ்சினத்த யானை: "கடுஞ்சினத்த களிறு" (மதுரைக். 179); "கடுஞ்சினத்த களிற்றெருத்தின்" (யா. வி. சூ. 56, மேற். "தாழிரும்")

48. (பி-ம்.) ‘உழக்க'

44-8. "செல்சமந் தொலைத்த வினைநவில் யானை, கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி, வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்தியல" (பதிற். 82:4-6)

50. (பி-ம்.) ‘வெயிற்கரப்ப'

51. (பி-ம்.) ‘வாப்பரிய'

52. (பி-ம்.) ‘காற்றெனக்'

51-2. "காலெனக் கடுக்குங் கவின்பெறு தேரும்" (மதுரைக். 388)