பக்கம் எண் :

432

யிலே (699) மகளிர் தேறன்மடுப்ப (780)மகிழ்ந்து (781) மகளிர்நறுந் தோளைப்புணர்ந்து (712)சேக்கைத்துஞ்சி (713) எழுந்து (714) உருவினையாகி (724)மார்பிலே (716) பிரசமும் மூசுவனமொய்ப்ப (717) விளக்கம்(719) தொடியொடுசுடர்வரக் (720) கலிங்கத்தைக் (721)கவைஇ (722) மறவர் (726) தாள்வலம் வாழ்த்த (727) மாறன்முதலாகக்(772) கோசரும் (773) ஐவருமுட்படக் (775) குறுநிலமன்னராகிய(776) அவரும்பிறரும் (777) நின்வாய்மொழிகேட்ப (774)நிற்புகழ்ந்தேத்த (778) மறவர்த்தம்மின் (729), செல்வர்த்தம்மின்(731), குரிசிலர்த்தம்மின் (736), ஊக்கலர்த்தம்மின்(743), பெருஞ்செயாட வர்த்தம்மின் (746), ஏனோருந் தம்மெனச்(747) சிலரை வரைந்துகூறி வாயிலிடத்துத் தகையாமற்(748) பிறரும் (746) யாவரும் வருகவெனப் பொதுப்படக்கூறி(747) நாளோலக்கமிருக்குமண்டலத்தேயிருந்து (748)புலவரொடு (750) பாணர்வருக, பாட்டியர்வருக (749), வயிரியர்வருக வெனவழைத்து (750) அவர்காட்டின இரவலர்க்கெல்லாம்(751) நீர்யாரென்னாதே (738) தேரைக் களிற்றொடும்வீசி(752) அரியதந்து குடியகற்றிப் (766) பெரியகற்று இசைவிளக்கி(767) ஞாயிறுபோலவுந் (768) திங்கள்போலவுஞ் (769) சுற்றமொடுபொலிந்து விளங்கி (770) வாழி (208) ; அங்ஙனம்வாழ்ந்து பிறப்பற முயலாது பயனின்றிக்கழிந்தோர்(237) திரையிடுமணலினும் பலரேகாண் (236), அப்பயனின்மையாலே(238) அண்ணலே (207) நீயும் அவ்வாறுகழியலாகாதென்று இவ்வாழ்விற்பெரிதாயிருப்பதொரு பொருளையான்கூறுவேன் (207) ; அஃதுஎன்னாற்காட்டுதலரிது; அதனை நெடியோன்போலத் (763) :தொல்லாணையினையுடைய நல்லாசிரியர் (761) புணர்கூட்டுண்டசிறப்பினையுடைய (762) பல்யாகாசாலைமுதுகுடுமியைப்போல(759) நல்லாசிரியரிடத்தே கேட்டிசின் (208) ; கேட்டுஅதனை நீகண்டவியப்பும் சால்பும் (764) புகரறுசிறப்பிற்(765) செம்மைசான்றோர் (764) பலர் தம்மிலிருந்துசொல்லப்பட்டுப் (765) பெருமானே, (781) நன்றாகிய ஊழிக்காலத்தைஇத்துணைக்காலமிருத்தியெனப் பால்வரைதெய்வத்தாலேவரையப்பட்டு நீஅறுதியாகப்பெற்ற (782) நாண்முழுதும்(780) இனிதாகப் பேரின்பத்தை நுகர்ந்திருப்பாய்(781) ; அதனை நுகராது ஐம்பொறிகட்கும் முன்னிற்கப்படுவனவாகியஇந்நுகர் பொருள்கட்கு நின்னொடு என்ன உறவுண்டு(206) ; இனி நின்னிடத்துண்டாகிய மாயைகெடுவதாக (208)என மாட்டுறுப்பானும் எச்சவுறுப்பானும் வினை முடிக்க.

"அகன்றுபொருள் கிடப்பினு மணுகியநிலையினு, மியன்று பொருள் முடியத் தந்தன ருணர்த்தன்,மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின" (தொல்.செய்யுளில், சூ. 210), "சொல்லொடுங் குறிப்பொடுமுடிவுகொ ளியற்கை, புல்லிய கிளவி யெச்ச மாகும்"(தொல். செய்யுளியல், சூ. 207) என்னுஞ் சூத்திரங்களாற்கூறிய இலக்கணம், "நல்லிசைப்