பக்கம் எண் :

437
50கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக
வடவர் தந்த வான்கேழ் வட்டந்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தன் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தற் சின்மலர் பெய்ம்மார்
55தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்
திருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
60வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவந் தாழொடு துறப்பக்
கல்லென் றுவலை தூவலின் யாவருந்
65தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார்
பகுவாய்த் தடவிற் செந்நெருப் பார
வாடன் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த வின்குரற் றீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்

51. மு. அகநா. 340 : 16

சிலப். 4 : 37 -8 , அடியார். மேற்.

51 - 2. " வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத், தென்மலைப் பிறந்த சந்தன மறுக " (சிலப். 4 : 37 - 8)

54. பல்லிருங் கூந்தல் : ஐங். 308 : 1, 429 : 1 ; அகநா. 43 : 11.

56. "குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு, குணதிசை மருங்கிற் காரகி றுறந்து " (சிலப். 4 : 35 -6)

" அகிலென்றது ஆகுபெயராற் புகையை ; " இருங்............புகைப்ப ' என்றார் நெடுநல்வாடையினும் " ஷ. ஷ. அடியார்.

57. கைவல் கம்மியன் : நெடுநல். 85.

66. தடவு : " வடபான் முனிவன் றடவினுட் டோன்றி " (புறநா. 201 : 8) ; "தடவளர் முழங்குஞ் செந்தீ" (சீவக. 2373)

68. (பி - ம்.) ‘'தன்மையிற்றிரிந்த '

69. "முலைவேதி னொற்றி முயங்கிப் பொதிவெம்" (கலித். 106 : 35) ;