|  | மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு | 
| 125 | முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப் புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
 தகடுகண் புதையக் கொ ளீஇத் துகடீர்ந்
 தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
 வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
 | 
| 130 | முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
 துணைபுண ரன்னத் தூநிறத் தூவி
 யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
 காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
 | 
| 135 | தோடமை தூமடி விரித்த சேக்கை யாரந் தாங்கிய வலர்முலை யாகத்துப்
 பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
 நன்னுத லுலறிய சின்மெல் லோதி
 நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
 | 
| 140 | வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
 வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
 வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
 செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
 | 
| 145 | பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்கு லம்மா சூர்ந்த வவிர்நூற் கலிங்கமொடு
 | 
 132 - 3. " இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட், டுணைபுணரன்னத்தின் றூவிமெல் லணையசைஇ "(கலித். 72 : 1 - 5) ; " துணை புண ரன்னத் தூவியிற் செறித்த, இணையணை", " இணைபுண ரெகினத்திளமயிர் செறித்த, துணையணைப் பள்ளி" (சிலப். 4 : 66 - 7, 27 : 208 - 9)
134. மதுரைக்.  721, குறிப்புரையைப் பார்க்க ; கந்த. நாட்டுப். 50.
140. (பி - ம்.) ‘வாயறை '
141. வார்மயிர்முன்கை :  பொருந.  32-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.
142. கடிகைநூல் யாத்து : "கைந்நூல் யாவாம்"(குறுந். 218 : 2) ; " காப்புநூல் யாத்து" (தொல். புறத். சூ. 5, ந. மேற்.)
143 - 4. " வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் " (சிலப். 6 : 95)