பக்கம் எண் :

466

எட்டாவது

1 குறிஞ்சிப் பாட்டு

அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுத
லொலிமென் கூந்தலென் றோழி மேனி
விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ 
யகலு ளாங்க ணறியுநர் வினாயும்
5பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் லுருவிற் கடவுட் பேணி 
நறையும் விரையு மோச்சியு மலவுற்

1 இது பெருங்குறிஞ்சியெனவும் வழங்கும் ; "எருவை யென்பது, ‘எருவை..........கருவிளை' எனக் கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியினும் வந்தது" (பரி. 19:77, பரிமேல்.) ; "கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியில் வரையின்றிப் பூ மயங்கியவாறு காண்க" (ஐங். அகத். சூ. 19, ந.)

1. அன்னாய் வாழிவேண் டன்னை: (தொல். 201-10; அகநா. 48:1, 68:1); "அன்னை வாழிவேண் டன்னை ;" (ஐங். 101-10)

வாழிவேண் டன்னை: குறுந். 321:8.

3. இழைநெகிழ்த்த நோய் : "புனையிழை ஞெகிழ்த்த புலம்புகொளவலமொடு" (நற். 348:7) ; "வீங்கிழை நெகிழ" குறுந். 358:1) ; "இழைநெகிழ் செல்லல்", "இழைநிலை நெகிழ", "இழை நெகிழ் செல்ல லுறீஇ", "வில்லிழை நெகிழ" (ஐங். 25:4, 310:2, 315:3, 318:2) ; "பாசிழை ஞெகிழ" (பதிற். 68:15) ; "திருந்திழை நெகிழ்ந்தன தடமென் றோளே", "வீங்கிழை நெகிழச் சாஅய்ச் செல்லலொடு", "திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய", "திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்" (அகநா. 206:16, 251:3, 255:17, 387;1)

5. "பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்" (சிலப். 24:20)

6. வேறு பல்லுருவிற் கடவுள் : "வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர்" (முருகு. 282) ; "மனக்கோ ணினக்கென வடிவுவே றிலையே" (பரி. 4:56)