பக்கம் எண் :

467
றெய்யா மையலை நீயும் வருந்துதி 
நற்கவின் றொலையுவு நறுந்தோ ணெகிழவும் 
10புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு
முட்கரந் துறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்
முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்
15சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் 
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த
லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை 
யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர்
மாதரு மடனு மோராங்குத் தணப்ப
20நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி
யிருவே மாய்ந்த மன்ற லிதுவென
நாமறி வுறாலிற் பழியு முண்டோ
வாற்றின் வாரா ராயினு மாற்ற
வேனையுல கத்து மியைவதா னமக்கென 
25மானமர் நோக்கங் கலங்கிக் கையற் 
றானச் சிறுமைய ளிவளுந் தேம்பு
மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர் 
வினையிடை நின்ற சான்றோர் போல
விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்
30கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும்

8. எய்யாமை யென்னுமுரிச்சொல் அறியாமை யென்னுங் குறிப் புணர்த்துமென்பதற்கு இவ்வடிமேற்கோள் ; தொல். உரி. சூ. 44, இளம். சே. தெய்வச். ந ; இ. வி. சூ. 290.

9. "தொல்கவின் றொலையத் தோணலஞ் சாஅய்" (நற். 14:1) ; "தொல்கவின் றொலைந்து தோணலஞ் சாஅய்" (குறுந். 381:1) ; "மென்றோ ணெகிழவும் ............ பொன்போல் விறற்கவின் றொலைத்த" (ஐங். 230:3-4) ; "நெகிழ்ந்த தோளே ...... மேனி தொன்னலந் தொலைய" (அகநா. 270:4-10)

13-4. "பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும்" (மூதுரை, 18) 

23. (பி-ம்.) ‘வாராதாயினும்'