பக்கம் எண் :

476
புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் 
புள்ளி வரிநுதல் சிதைய நில்லா 
தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே
175ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் 
திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய
துணையறை மாலையிற் கைபிணி விடேஎ
நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை
யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்ததை
180யஞ்சி லோதி யசையல் யாவது
மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென
மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந்
தென்முக நோக்கி நக்கன னந்நிலை

172. புண்ணுமிழ்குருதி : பதிற். 118.

பாய்தல், பரத்தலென்னும் குறிப்புப்பொருண்மையையுணர்த்து மென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 63, ந ; இ-வி. சூ. 281, உரை ; ‘புண்ணுமிழ் குருதிப் புனல் பாய்ந்து' என்ற பாடத்துடன், மேற்கோள் காட்டுவர் ; தொல். உரி. சூ. 64, இளம். 

175. முருகு. 245, குறிப்புரை.

176. (பி-ம்.) ‘திண்ணிலை'

177. (பி-ம்.) ‘துணையமை மாலையிற்' 

176-7. சிறுபாண். 69, குறிப்புரை. "கடம்பு சூடிய கன்னி மாலை போற், றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடும்" (சீவக. 990)

178-9. "வாழை முழுமுத றுமிய..........இழிதரு மருவி" (முருகு. 307-16)

178-81. "காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள், தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலால், நணாகநறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற், பூணாக முறத்தழீஇப் போதந்தான்" (கலித்.39:1-4) 

182. நுதல் நீவுதல் : நற். 28:2, 316:6 ; கலித். 21:6 ; அகநா. 240:10 ; பெறுக நின்னை யானென, நறுநுத னீவிப் படர்தந் தோனே" (தமிழ்நெறி. மேற்.)

160-83. இவ்வடிகள், தலைவன் களிறுகாத்தவாற்றிற்கும் புனலின் எடுத்தலாற்றிற்கும் மேற்கோள் ; தொல். பொருளியல், சூ. 13, ந.