5 | வான்பொய்ப்பினுந் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும் விளைவறா வியன்கழனிக் கார்க்கரும்பின் கமழாலைத் | 10 | தீத்தெறுவிற் கவின்வாடி நீர்ச்செறுவி னீணெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கட் காய்ச்செந்நெற் கதிரருந்து மோட்டெருமை முழுக்குழவி | 15 | கூட்டுநிழற் றுயில்வதியுங் |
ஏகினும் ' என இயற்சீர் நிற்பத் தன்சீர் வந்தும், ‘தற்.......... உணவின்' எனத் தன்முன்னர் வெண்சீர் வந்தும், ‘புட் ............மாறி ' என இரண்டு வெண்சீர் வந்தும்............. தூங்கலோசை பிறக்குமென்றுணர்க " (தொல். செய். சூ. 22, ந.) 3 - 5. " தற்பாடு பறவை பசிப்பப் பசையற, நீர்சூல் கொள்ளாது மாறிக் கால்பொரச், சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ" (ஆசிரியமாலை) 6. " மலைத்தலைத் தொடுத்த மல்லற் பேரியாற்று" (பெருங். 3. 24 : 15) ; " கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் " (கம்ப. ஆற்றுப். 19) 5 - 6. பொய்யாக் காவிரி : " இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும், அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட " (புறநா. 35 : 7 - 8) ; " கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்...........காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை " (சிலப். 10 : 102 - 8) ; "கோணிலை திரிந்து கோடை நீடினும், தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை " , " தவாநீர்க் காவிரிப் பாவை" (மணி. பதிகம், 24 - 5, 3 : 55) ; " பூந்தண் பொன்னி யெந்நாளும் பொய்யாதளிக்கும் புனனாட்டு " (பெரிய. சண்டேச. 1) ; " பொய்யாத பொன்னி " (விக்கிரம. உலா, 40 - 41) ; " வற்றாத பொன்னி நதி" (குலோத். பிள்ளைத்.) ; " வாழிவற் றாத காவிரி" (தக்க. 812) ; " காவிரி யென்னத் தப்பாக் கருணையான் " (வி - பா. அருச்சுனன்றவநிலை. 24) 11. குறுந். 309 : 5 - 6. 13. (பி - ம்.) ‘கதிரருந்தி ' 14 - 5. குழவியென்னு மிளமைப்பெயர் எருமைக்கு முரித்தென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். மரபு. சூ. 20, பேர்.
|