665 | இப்பதிப்பில் வந்துள்ள நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி | அகநா - அகநானூறு அடிக் - அடிக்குறிப்பு அடியார் - அடியார்க்கு நல்லாருரை அரிச்சந்திர - அரிச்சந்திர புராணம் அருணாசல - அருணாசலபுராணம் அரும்பத - அரும்பதவுரை அறநெறிச் - அறநெறிச்சாரம் ஆசார - ஆசாரக்கோவை ஆனந்த வண்டு - ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூது ஆனைக்கா - திருவானைக்காப் புராணம் இ. கொ - இலக்கணக்கொத்துரை இலிங்க - இலிங்கபுராணம் இ. வி - இலக்கணவிளக்கவுரை இளம் - இளம்பூரணருரை இறை - இறையனாரகப் பொருளுரை ஈங்கோய் - ஈங்கோய் மலையெழுபது உத்தர - உத்தர ராமாயணம் ஐங், ஐங்குறு - ஐங்குறுநூறு ஐந், ஐம் - ஐந்திணையைம்பது ஒ - ஒத்தபகுதி கண்டனலங் - கண்டனலங்காரம் கந்த - கந்தபுராணம் கந்தரலங் - கந்தரலங்காரம் கம்ப - கம்பராமாயணம் கல் - கல்லாடம் கலித் - கலித்தொகை கலிங்க - கலிங்கத்துப்பரணி களவழி - களவழி நாற்பது காசி - காசிகாண்டம் காசிக் - காசிக்கலம்பகம் காஞ்சிப் - காஞ்சிப்புராணம் கார் - கார்நாற்பது காரைக் - காரைக்காலம்மையார் குலோத். உலா - குலோத்துங்க சோழனுலா குலோத். பிள்ளை - குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் குறிஞ்சிப் - குறிஞ்சிப்பாட்டு குறுந் - குறுந்தொகை கூர்ம - கூர்மபுராணம் கோயின் மூத்த - கோயின் மூத்த திருப்பதிகம் சிதம்பர - சிதம்பரபுராணம் சிலப் - சிலப்பதிகாரம் சிவ. போ - சிவஞானபோதம் சிறுபஞ்ச - சிறுபஞ்சமூலம் சிறுபாண் - சிறுபாணாற்றுப்படை சீகாழித் - சீகாழித்தலபுராணம் சீகாளத்தி - சீகாளத்திப்புராணம் சீவக - சீவகசிந்தாமணி சூ - சூத்திரம் சூடாமணி - சூடாமணி நிகண்டு சூளா - சூளாமணி செருக்களத் - செருக்களத்து அலகை வகுப்பு சே - சேனாவரையருரை சோணசைல - சோணசைலமாலை ஞானா - ஞானாமிர்தம் தக்க - தக்கயாகப்பரணி தகடூர் - தகடூர்யாத்திரை தஞ்சை - தஞ்சைவாணன் கோவை தண்டி - தண்டியலங்காரம் தணிகை, தணிகைப் - திருத்தணிகைப்புராணம் தமிழ்நா - தமிழ்நாவலர்சரிதை தமிழ்நெறி - தமிழ்நெறிவிளக்கம் தமிழ்விடு - தமிழ்விடுதூது தனிப் - தனிப்பாடல் திணைமா, திணைமாலை - திணைமாலை நூற்றைம்பது திணைமொழி - திணைமொழி யைம்பது திரி - திரிகடுகம் திருக்காளத்திப் - திருக்காளத்திப்புராணம் திருக்குற் - திருக்குற்றாலப்புராணம் திருச்சிற் - திருச்சிற்றம்பலக்கோவையார் திருநாகைக் - திருநாகைக் காரோணப்புராணம் திருப் - திருப்புகழ் திருவரங்கக், திருவரங்கக்கலம் - திருவரங்கக்கலம்பகம் |
|
|
|