அண்டர்க ளுறுகண் விண்டிட முந்நீர்
அலைகடல் குடித்தும் மலைநில மழுத்தியும் தென்றிசை யுயர்ந்த நொய்ம்மை போக அப்பணி சடையாற் கொப்பவீற் றிருந்தும் பன்னா வலர்புகழ் தென்னா டாண்ட இராவணன் றனையவ ணிராவணம் போக்கியும் இலங்குறு பொதியில் விலங்கல்வாழ் பெருந்தவத் தகத்தியன் புரந்தருண் மகத்துவ மிகுத்த அமிழ்தினிற் சிறந்த தமிழெனு மடந்தை கந்தரத் தணிமணிக் கலனர சென்ன உத்தமர் புகழுமிப் பத்துப் பாட்டும் பாண்டிவள நாட்டில் மதுரையம்பதியில் ஸ்ரீ அங்கையற்கண் அம்மையோடு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சோமசுந்தரக்கடவுள் அருளிய சங்கப்பலகையில் அக்கடவுளோடு ஒப்ப வீற்றிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்களாகிய நக்கீரனார் முதலிய எண்மரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாமென்னும், 1பத்துமாகும்; "முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை, பெருகு வளமதுரைக் காஞ்சி-
1 பத்துப்பாட்டின் இலக்கணமாக, இரண்டு சூத்திரங்கள் பன்னிரு |