பக்கம் எண் :

673
வனவும், திருச்சீரலைவாயில் அவர் எழுந்தருளுவதும் சொல்லப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியால் அவரை வழிபடும் முனிவர்களுடைய ஒழுக்கமும், தேவருடன் அவரைத் தரிசிக்கவரும் மகளிர் இயல்புகளும், திருமால் முதலியவர்களைப்பற்றிய செய்திகளும் அறியலாகும். நான்காவது பகுதியில் அந்தணர், இயல்பும், அவர்கள் அவரை வழிபடும் முறைமையும் கூறப்பட்டுள்ளன. ஐந்தாவது பகுதியில், குன்றக் குரவையின் நிகழ்ச்சி, அவரைச் சேவிக்கும் மகளிர் பாடுமகளிர் ஆடுமகளிர் ஆகிய இவர்களின் இயல்பு, அவருடைய அணி ஆடை செயல் முதலிய சிறப்புக்கள் ஆகிய இச்செய்திகளைக் காணலாம். ஆறாவதுபகுதி அவர் எழுந்தருளியுள்ள இடங்களையும், தேவராட்டி அவரை ஆற்றுப் படுத்தும் முறையையும், அவரைத் துதிக்கும் முறையையும், அவர்பாற்சென்று அருள்பெறும் வழியையும், அவருடைய தொண்டர்களின் நல்லியல்புகளையும், அவர் அருள்புரியும் விதத்தையும், பழமுதிர் சோலையிலுள்ள அருவியின் சிறப்பையும் விரித்துக்கூறும்.

இதனால், முருகக்கடவுளுக்குரிய காந்தள், வெண்கடம்பு, வெட்சியென்னும் மலர்களும், கோழி மயிலென்னும் கொடிகளும், தகர் மயில் யானை யென்னும் ஊர்திகளும், அவரை அறுவர் வளர்த்தது, குன்றங்கொன்றது, சூர்முதல் தடிந்தது முதலிய திருவிளையாடல்களும் உணரப்படுகின்றன.

2. பொருநராற்றுப்படை: இது 248 அடிகளை உடையது: வஞ்சியடிகள் இடையில் வந்த ஆசிரியப் பாவாலாகியது; பரிசில் பெறக்கருதிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்றானொரு பொருநன் இளஞ்சேட்சென்னிபுதல்வனாகிய கரிகாற்பெருவளத் தானிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அக் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. பொருநர் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர் பரணி பாடுவோரெனப் பலர். அவருள் 1இதிற் கூறப்படுபவன் போர்க்களம் பாடும் பொருநன்; இப்பொருநன் தடாரிப்பறை கொட்டுபவன்; இப்பாட்டில், "கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி ...................ஒன்றியான் பெட்டா வளவையின் " (70-73) என வருதல் காண்க.

இதனுள், பொருநர்கள் விழாவிற்கூடித் தங்கள் இசைத்திறனைக்காட்டி அவ்விழா முடிந்தபின் வேற்றூரை நோக்கிச் செல்லும் இயல்பினரென்பதும், பாலையாழின் வருணனையும், பாலைப் பண்ணை வாசிப்பதனால் ஆறலைகள்வர் தங்கள் கொடுஞ்செயலை மறந்து அன்புடையராவாரென்பதும், விறலியுடைய 2கேசாதி பாதவருணனை


1 "இவன் போர்க்களம் பாடும் பொருநனாதலாலும், கூத்தரில் இவனிற் சிறந்த கூத்தர் இன்மையானும் இங்ஙனம் கூறினார்" (பொருந. 56-7, ந.) பொருநர் - மற்றொருவர்போல வேடங் கொள்வோர்; நன். சூ.208, சங்கர.

2"இங்ஙனம் சீறடியுங் கூட்டி எண்ணாக்கால் தலைமுதல் அடியீறின்றாகக் கூறிற்றாம்" பொருந. 47, ந.