பக்கம் எண் :

680
பின்பு தலைவியின் நிலையைக்கூறப்புக்க ஆசிரியர், தலைவி வதியும் அரண்மனையின் அமைப்பையும் அதன் வாயில் முதலியவற்றின் அழகையும், தலைவிபள்ளிகொள்ளும் பாண்டிற் கட்டிலின் கைத்தொழில் நலத்தையும், அதில் இட்டுவைத்துள்ள பாயலின் அமைப்பையும் கூறித் தலைவி அரசன் பிரிவினால் வருந்தும் நிலையை அவளது பண்டைய நிலையொடு மாறுபடச்சுட்டி விரிக்கின்றார். இதனால் தலைவியின் கற்பு நிலையும் அவளுற்ற துயர் மிகுதியும் விளங்குகின்றன. அவளது வருத்தம் தீர மகளிரும் செவிலியரும் ஆற்றும் செயல்கள் பின்பு சொல்லப்படுகின்றன. இறுதிப்பகுதியில், அரசன் புண்பட்ட வீரர்கள் பால் அன்பு பூண்டு நடுயாமமென்று பாரானாகி மழை பெய்தலையும் கருதாமற் சென்று முகமலர்ந்து அவர்களைக் கண்டு ஆற்றுவிக்கும் செய்தி கூறப்படுகின்றது. இதனால் அரசனுடைய எளிமையும், செய்ந்நன்றியறிவும், வீரர்களது பெருமையும் புலப்படுகின்றன.

இடையிடையே கூறப்படும் செய்திகளால், பூ மலர்வதனாற் பொழுதை அறியும் வழக்கமும்,. மகளிர் மாலைக்காலத்தைக் கொண்டாடும் செயலும், மனைவகுக்கும் முறையும், வேலுக்கு அடையாளப் பூவை அணியும் மரபும் அறியப்படுகின்றன.

8, குறிஞ்சிப் பாட்டு: இது 261 அடிகளை உடைய ஆசிரியப்பாவாலமைந்தது. 1காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகித் தலைவன் வரும் வழியிலுள்ள ஊறஞ்சும் காலத்துத் தலைவி பாங்கிக்கு அறத்தொடு நின்றாளாக, பாங்கி 2எளித்தல், ஏத்தல், வேட்கையுரைத்தல், ஏதீடு, தலைப்பாடு, உண்மைசெப்பும் கிளவியென்னும் ஆறும் கூறிச் செவிலிக்கு அறத்தொடு நின்றவழிக் கூறும் கூற்றாக ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச்சுவையை அறிவுறுத்தற் பொருட்டுக் கபிலர் பாடியது.

குறிஞ்சி-புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமுமாகிய ஒழுக்கம். இதன் கண் இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறப்படுதலின் இஃது இப்பெயர் பெற்றது.

இப்பாட்டு 3பெருங்குறிஞ்சி யெனவும் வழங்கப் பெறும். இதில் பிறதிணைக்குரிய முதலுங் கருவும் மயங்கிவந்தனவேனும் உரிப்பொருட் சிறப்புப்பற்றி இது குறிஞ்சியென்னும் பெயர் பெற்றது.

இதனுள் தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்றற்குக் காரணமாகிய சிறைகாவல், "காவலர் கடுகினும்" (240) என்பது முதலிய அடிகளாலும், தலைவனுக்கு வரும் ஊறஞ்சுதல், "அளைச்செறி யுழுவையும்" (252) என்பது முதலிய அடிகளாலும், தலைவி பாங்கிக்கு அறத்தொடு நின்றது, "முத்தினு மணியினும் "(13) என்பது முதலியவற்றாலும் விளங்கும்.

இப்பாட்டு, களவொழுக்கத்தினைப் புலப்படுத்தி நிற்பது. களவுக் காலத்து நிகழ்வனவற்றிற் பெரும்பான்மையான செய்திகள் இதில்


1 இறை.சூ.29.

2 தொல். பொருளியல், சூ.13.

3 பரி. 19:77, பரிமேல்; தொல். அகத். சூ. 19, ந.