நாட்டிற்குச் செல்லத்தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கி, 'தலைவியைப்பிரிந்து வாரேன்' என்று செலவழுங்கிக் கூறும் கூற்றாகச் சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. 1வஞ்சி நெடும்பாட்டெனவும் இது வழங்கப்பெறும். இப்பாட்டைப் பாடியதற்காக உருத்திரங்கண்ணனார் பதினாறுநூறாயிரம் பொன் கரிகாற் பெருவளவனாற் பரிசு பெற்றனரென்பது, "தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன், பத்தொ டாறுநூ றாயிரம் பெறப், பண்டுபட்டினப் பாலை கொண்டதும்" (கலிங்க. இராச. 21) என்பதனாலறியப்படுகின்றது; "பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு, கோடி பசும்பொன் கொடுத்தோனும்" (சங்கர சோழனுலா, 10), "பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டாற் பதினாறு, கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே" (தமிழ்விடு. 193) என்பவற்றால் அத்தொகை பதினாறுகோடி பொன்னெனக் கூறுவாரும் உளரென்று தெரிகின்றது. இப்பாட்டை வஞ்சிப்பாவின் இடையளவிற்கு எல்லையாகக் காட்டுவர் 2நச்சினார்க்கினியர். பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையாகலின் இஃது இப்பெயர்பெற்றது; பாலை-பிரிதலும் பிரிதல் நிமித்தமும். இதில் வேற்று நாட்டிற்குத் தலைவன் பிரியும் காலத்துத் தானுறும் இடும்பையிடத்து அவன் செலவுதவிர்ந்து நெஞ்சொடு கூறினமை, "முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய, வாரேன் வாழிய நெஞ்சே ......திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய, வேலினும் வெய்ய கானமவன், கோலினுந் தண்ணிய தடமென் றோளே" என்னும் அடிகளாற் புலப்படும். அவளை ஆற்றுவித்துப் பின்பு பிரிதல் கருதியே வாரேனென்றான். இது, "செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்" (தொல். கற்பு. சூ. 44) என்னும் இலக்கணத்தாற் பெறப்படும். "முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே, நுவலுங் காலை முறைசிறந் தனவே" (தொல். அகத். சூ. 3) என்பதன் உரையில் உள்ள, `முதலிற் கருவும் கருவில் உரிப்பொருளும் சிறந்து வரும்' என்பதற் கிணங்க இதில் உரிப்பொருளே சிறந்து வந்தது. இப்பாட்டில் முதலில் சோழநாட்டின் பெருமையும் பின்பு காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பும் அதன்பின் கரிகாற் பெருவளத்தான் வீரச்செயல்களும் உறையூரை அவன் வளப்படுத்தினமையும் கூறப்படுகின்றன. முதலில், பஞ்சகாலத்தின் காரணங்களும், இயல்புகளும், காவிரியின் சிறப்பும், சோழநாட்டுக் குடிவளமும் 3இருகாமத் திணையேரி, அறச் 1 யா. வி. செய். சூ.37; யா. கா. ஒழிபு. சூ. 4; இ, வி. சூ. 745, உரை. 2 தொல். செய். சூ. 157. 3 இவ்வேரிகள் சோமகுண்டம் சூரியகுண்டமென வழங்கப் பெற்று வந்தன; இவ்விரண்டும் திருவெண்காட்டிலுள்ள சோமதீர்த்தமும் சூரிய |