பக்கம் எண் :

687

பின்பு கிடைத்த பிரதிகளுள் ஆறுமுகமங்கலத்துப்பிரதியில் திருமுருகாற்றுப்படை மூலமும் பொருநராற்றுப்படை மூலமும் சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைப் பிரதியில் பெரும்பாணாற்றுப்படை மூலமும் முல்லைப்பாட்டு மூலமும் இருப்பக்கண்டு அவற்றோடு நான் எழுதி வைத்திருந்த மூலங்களை ஒப்புநோக்கிக் கொண்டேன். மேற்படி புத்தகசாலைப் பிரதியில், "முருகாறு பொருநாறு சிறுபா ணாறு முல்லைபெரும் பாணாறு மதுரைக் காஞ்சி, பரிதாய பொருடழுவா நெடுநல் வாடை பட்டினப்பா லைகுறிஞ்சி மலைக டாமும், மருவாரும் பொழில்புடைசசூழ் களந்தை மூதூர் வருசிவப்ப பூபனருள் வேல பூபன், உரையோடு மெழுதினனா தலினா லன்னானோங்குபெருஞ் செல்வமிசை யுற்று வாழி" என்னும் பாடலொன்று எழுதப்பட்டிருந்தது. குறிஞ்சிப்பாட்டில் 64-ஆம் அடிக்குமேற் சில அடிகள் விட்டுப்போனது போற் றோற்றியது. தருமபுரமடத்திலிருந்து கிடைத்தத ஒற்றையேடுகளுள் ஒன்றில் அப்பகுதி யிருப்பதைக்கண்டு அதனைச் சேர்த்துக் கொண்டேன். இப்பிரதிகளுள் ஒன்றிலேனும் சிறிய தொடர்கள் சில வற்றிற்கு உரை கிடைக்க வில்லை.

பத்துப்பாட்டு மூலமும் உரையும் 1889-ஆம் வருடத்தில் முதற்பதிப்பாக வெளியிடப் பெற்றன.

அப்பதிப்பிற்கு உதவியாக இருந்த ஏட்டுப் பிரதிகள்:

1. திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம்

ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்

பிரதி.....1
2. தருமபுர ஆதீனத்துப் புத்தகசாலைப் " ....1
3. வேலூர் ஸ்ரீ குமாரசாமி ஐயர் அவர்கள் " ....1
4. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ குமாரசாமி பிள்ளை அவர்கள் " .....1
5. திருநெல்வேலி ஸ்ரீ கவிராஜ நெல்லையப்ப பிள்ளை
அவர்களும் அவர்களுடைய தம்பி ஸ்ரீ கவிராஜ
ஈசுவரமூர்த்திப் பிள்ளையவர்களும் உதவிய
" ....1
6. திருநெல்வேலியைச் சார்ந்த வண்ணாரப்பேட்டை
ஸ்ரீ திருப்பாற்கடனாத கவிராயர் அவர்கள்
" ....1
7. ஆழ்வார்திருநகரி ஸ்ரீதேவர்பிரான் கவிராயரவர்கள் " ....1
8. பொள்ளாச்சி வித்வான் ஸ்ரீ சிவன்பிள்ளை அவர்கள் " ....1
9. ஸ்ரீ திருவம்பலத்தின்னமுதம்பிள்ளை அவர்கள் " ....1
10. ஸ்ரீ கனகசபைப் பிள்ளை அவர்கள் " ....1
11. சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைப் " ....1

இவற்றுள் உரை மட்டுமிருந்த பூர்த்தியான பிரதிகள், 3,4,6 - என்ற எண்களுள்ளவைகளே.