பக்கம் எண் :

694
டங்களை யானைகள் உராய்ந்து பாழ்படுத்தினமை எயினர் கொள்ளையிடுவதனால் ஊர் கவினழிந்திருத்தல் ஆகிய செய்திகள் பட்டினப்பாலையிலும் இவர் இயற்றிய அகநானூற்றுச் செய்யுளிலும் காணப்படுகின்றன. பெரும்பாணாற்றுப் படையிற் காணப்படுகின்ற, பலாமரத்தைப் பறவைத் தொகுதிகள் விரும்புகின்றன வென்ற செய்தி குறுந்தொகையில், "கொடுமென் சினைய கூருகிர்ப் பறவை, அகலிலைப் பலவின் சாரன் முன்னிப் பகலுறை முதுமரம் புலம்பப் போகும்" என்ற அடிகளில் அமைந்திருக்கின்றது. பண்டங்களுக்குச் சுங்கம் வாங்கும் முறையும், சாத்து, சிறுவர், உருட்டும் தேர் என்பவற்றைப் பற்றியசெய்திகளும், அரசனுக்குச் சிங்கத்தை உவமை கூறுதலும் இவர் செய்யுட்களில் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களிற் காணப்படுகின்றன. மகளிர் பொற்குழையைப் பாராட்டாமையாகிய செய்தியால் செல்வப்பெருக்கத்தைப் புலப்படுத்தியிருக்கின்றனர். பட்டினப்பாலையும் அகநானூற்றுச் செய்யுளும் தலைமகன் செலவழுங்கிக்கூறும் கூற்றாக அமைந்துள்ளன.

சில சொற்றொடர்கள் இவருடைய செய்யுட்களில் இரண்டிடங்களில் வந்திருத்தலைக் காணலாம்; "அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி, முரட்பூமலிந்த முதுநீர்ப் பொய்கை" (பெரும்பாண், 293-4) என்பதும், "முருகமர்பூ முரண்கிடக்கை, வரியணி சுடர் வான்பொய்கை"(பட்டினப். 37-8) என்ற பகுதிகளும் ஒரு சாரொத்திருத்தலையும், "கொடிவரிக்குருளை"(பெரும்பாண். 449, பட்டினப். 221), "பகல்விளையாடிப், பெறற்கருந்தொல்சீர்த் துறக்க மேய்க்கும், பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை" (பெரும்பாண்.387-9. பட்டினப். 103-5) என்ற பகுதிகள் இரண்டிடங்களிற் சிறிதும் வேற்றுமையின்றி வந்துள்ளமையையும் காண்க.

4. கபிலர்: இவர் குறிஞ்சிப்பாட்டை இயற்றிய ஆசிரியர். இவர் பிறந்த ஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர்; இது திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்திலுள்ள, "நீதிமா மதூக நீழனெட்டிலை யிருப்பை யென்றோர், காதல்கூர் பனுவல் பாடுங் கபிலனார் பிறந்த மூதூர், சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி துலங்கக் காட்டும், வேதநா யகனார் வாழும் வியன்றிரு வாத வூரால்"(27:3) என்னும் திருவிருத்தத்தால்வெளியாகின்றது.

இவர் அந்தண வருணத்தவர்; "யானே, பரிசிலன் மன்னு மந்தணன்". "யானே தந்தை தோழ னிவரென் மகளிர், அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே" (புறநா. 200-201) என இவர் தம்மைக் கூறிக்கொள்வதனாலும், " புலனழுக் கற்ற வந்தணாளன்" (புறநா.126)என மாறோகத்து நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறுவதாலும் இதனை அறியலாம்.

இவர், வேள்பாரியினுடைய உயிர்நண்பரும் அவனுடைய அவைக்களத்துப் புலவருமாக இருந்து அவனை மகிழ்வித்து வந்தார்; இடையிடையே முள்ளூருக்குரியவனும் வள்ளலுமாகிய மலையமான் திருமுடிக்