பக்கம் எண் :

697
கும் சிறந்த நட்பினராக இருந்தாரென்று இவர் எண்ணப்படுகிறார். வீரசோழியம், தொகைப்படலம், 6-ஆம் கலித்துறை உரையால் பரணருடன் இவர் வாது செய்தனரென்பது வெளியாகின்றது. இவர் வேறு; தொல்கபிலர் வேறு.

இவர் அருளிச்செய்தனவாக 279-பாடல்கள் இப்பொழுது தெரிகின்றன. அவற்றுள் அகவற்பாக்கள், 208; நற்.20, குறுந்.29, ஐங்.100, பதிற்.10, அகநா.17, புறநா.30, குறிஞ்சி.1, "நெட்டிலை யிருப்பை" என்பது, 1; வெண்பாக்கள், 42: திருவள்ளுவமாலையிலுள்ள "தினையளவு" என்பது, 1; இன்னாநாற்பது, 41: கலிப்பா, 29: குறிஞ்சிக்கலி.

மேற்கூறிய பாடல்களில் குறிஞ்சித் திணையைச் சார்ந்தன, 91; முல்லை, 1; பாலை,1; மருதம், 1; நெய்தல், 3.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கென்னும் முத்தொகுதி நூல்களிலும் இவருடைய பாடல்களும் நூல்களும் கலந்திருத்தல் இவரது பெருமையை விளக்குகின்றது.

11-ஆம் திருமுறையிலுள்ள மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி யென்னும் பிரபந்தங்கள் மூன்றையும் இயற்றிய கபிலதேவ நாயனாரென்பவர் இவரேயென்பது சில பெரியயோர் கொள்கை; "ஏனையந்தாதி சொன்னவன் கபிலன்" (திருவால.20:11) எனச் சிவபெருமான் கட்டளையிட்டருளியதாகக் கூறப்பட்டிருத்தலுங் காண்க. இப்பிரபந்தங்கள் இவரியற்றியனவென்பது ஆராய்ந்து நிச்சயத்தற்குரியது.

"முதலிற் கூறுஞ் சினையறி கிளவி" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு இளம்பூரணரும் சேனாவரையரும் எழுதியவுரையால், கபிலராற் செய்யப்பெற்றதான கபிலமென்று ஒரு நூலிருந்ததாகத் தெரிகிறது; அஃது இப்பொழுது கிடைக்கவில்லை.

பன்னிரு பாட்டியலில் இவர் பெயரால் வழங்கும் சில சூத்திரங்களும் தனிப்பாடல்களில் வழங்கும் வெண்பாவும் அகவலும் பிற்காலத்தவர்களால் இயற்றப்பெற்றனவென்பது சிலர் கொள்கை.

இவரைப் பாராட்டிக் கூறினவர்கள் நக்கீரனார், பெருங்குன்றூர்கிழார், பொருந்திலிளங்கீரனார், மாறோகத்து நப்பசலையார் என்பார். நக்கீரனார் இவரை, "உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்" (அகநா.78) எனப்புகழ்ந்து இவர் கிளியினால் நெற்கதிர் தொகுத்த விரகைக்குறிப்பித்துள்ளார்; அன்றியும் அவர் ஒருவனைச் சாவப்பாடிய அங்கதப்பாட்டுள், "முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி, பரணர் கபிலரும் வாழி" (தொல்.செய். சூ.179, பேர். மேற்.) என அகத்தியரோடு பரணரையும் இவரையும் ஒருங்கு வாழ்த்தி இவருடைய பெருமையைப் புலப்படுத்தியிருக்கிறார். பெருங்குன்றூர்கிழார், "உவலைகூராக் கவலையி னெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக், கபிலன் பெற்றவூரினும் பலவே" (பதிற்.85) என்றும், பொருந்திலிளங்கீரனார், "செறுத்த செய்யுட் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க்