699 | (ஐங்குறு. 243) என்று பாடிய பகுதிகள் அறிதற்குரியன. இத்தகைய செய்திகளை விளங்க உணர்த்தி, ஐங்குறுநூற்றில் 'வெறிப்பத்து' என்னும் பத்துச் செய்யுட்களைத் தனியே பாடியுள்ளார். தலைவியின் நோய்க் காரணத்தை அறியாத செவிலி வருந்தும் முறை இங்கே கூறியவாறே, "அறியா மையின் வெறியென மயங்கி, அன்னையு மருந்துய ருழந்தனள்" (ஐங். 242) என்று பிறிதோரிடத்தும் காணப்படுகின்றது. தலைவியின் தோள்கள் காமநோயால் நெகிழ்ந்த தன்மையைப் பலவிடங்களிற் கூறுவார். தலைவி தன் நோயின் காரணத்தை மறைத்தனளென்று இங்கே உள்ள செய்தியை இன்னும் நயம்பட, "தன்னெவ்வங் கூரினு நீசெய்த வருளின்மை, என்னையு மறைத்தாளென் றோழி....கூருநோய் சிறப்பவு நீசெய்த வருளின்மை, சேரியு மறைத்தாளென் றோழி.... நோயடவருந்தியு நீசெய்த வருளின்மை, ஆயமுமறைத்தாளென் றோழி" (கலித். 44) என்றமைத்தமை காண்க. போர்செய்யும் இரண்டு வேந்தர்க்கு இடையே சந்து செய்விப்போரைத் தோழிக்கு உவமையாக ஈண்டுக் கூறியவர், மலையிலிருந்து வரும் அருவிக்கு உவமையாக அதனை எடுத்தாண்டுள்ளார் (கலித். 46). தோழி, தாய்க்கும் தலைவியின் துயருக்கும் அஞ்சும் இருவகையான அச்சத்தை இங்கே கூறியவர் வேறுவிதமான இரண்டு அச்சங்களைப் பிறிதோரிடத்திற் சொல்லியிருக்கின்றனர்; அது வருமாறு: "குன்ற நாடன், உடுக்குந் தழைதந்தனனே யாமஃ, துடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற், கேளுடைக்கேடஞ் சுதுமே" (நற். 359). தினைக்கதிர்க்கு யானையின் துதிக்கையை உவமை கூறுவர். மூங்கிலை நெல்லோடு யானை உண்ணுமென்ற செய்தி கலித்தொகையில், "வாங்குகோ னெல்லொடு வாங்கி வருவைகல், மூங்கின் மிசைந்த முழந்தா ளிரும்பிடி" என்ற விடத்தும் கூறப்பட்டுள்ளது. தலைவி இதண மேறிக் கிளிகளைத் தழல்தட்டை முதலிய கருவிகளைக் கொண்டு கடிதல் இவருடைய செய்யுட்கள் பலவற்றிற் காணப்படுகின்றது; அவற்றுள், "வேங்கைப், பாவமை யிதணமேறிப் பாசினம், வணர்குரற் சிறுதினை கடிய" (நற். 373), "சுடுபுன மருங்கிற்கலித்த வேனற், படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே" (குறுந். 291), "குறமகள் ......... தட்டையின், ஐவனச் சிறுகிளி கடியு நாட" (ஐங்குறு. 285) என்பன குறிப்பிடத்தக்கவை. தலைவி கிளியோப்பிச் சுனைப்பூவைப் பறித்துத் தழைதொடுத்திருந்தாளென்று இங்குக் கூறியதோடு, "சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப். புனக்கிளி கடியும் பூங்கட்பேதை" (குறுந். 142) என்பதை ஒப்பிடுக. "மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும்" என மலர்களை வகைப்படுத்தியவர், "கொடியவுங் கோட்டவும்" (கலித். 54) எனப் பிறிதோரிடத்தில் வகுத்துள்ளார். தலைவி அசோகமரத்தடியில் இருந்தகாலைத் தலைவன் வந்தானென்று இங்கே புனைந்தவர், "செயலைத் தோன்றும், நற்றார் மார்பன்" (நற். 376) எனக் கூறுதல் காண்க. தலைவன் பலவித மலராலாகிய கண்ணியோடும் சந்தனம்பூசிய மார்பையுடையவனாக வில்லையும். |
|
|
|