அம்பையும் ஏந்திக் கச்சு கழல் முதலியவற்றை அணிந்து நாயோடு வந்தானென இங்கே சொல்லப்படுகின்றது. அவன் கண்ணியுடனும் வில்லுடனும் வந்தமையை, குல்லை குளவி கூதளங் குவளை, இல்லமொடு மிடைந்தவீர்ந்தண் கண்ணியன், சுற்றமை வில்லன்" (நற். 376) என்றும், "தொடைமாண்ட, கண்ணியன் வில்லன் வரும்" (கலித். 37) என்றும், கண்ணியையும் சந்தனத்தையும் அணிந்து வந்தமையை, "தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை" (கலித். 52) என்றும், வில்லும் அம்பும் ஏந்தி வந்தமையை, "உருவ வல்வில் பற்றி யம்பு தெரிந்து" (அகநா. 82) என்றும், சந்தனம் பூசிவந்தமையை, "ஆரநாறு மார்பினை" (குறுந். 198), "ஆரமார்பினை" (கலித். 52) என்றும், கச்சும் கழலும் அணிந்து வந்தமையை, "பாசி சூழ்ந்த பெருங்கழற், றண்பனி வைகிய வரிக்கச் சினனே" (ஐங்குறு. 206) என்றும் நாயோடு வருதலை, "வயநாய் பிற்படப், பகல்வரின்" (அகநா. 118) என்றும் புலப்படுத்தி யிருக்கின்றார். இதன்பாலுள்ள வெண்போழ்க் கண்ணி யென்ற தொடர், பதிறுப்பத்திலும் (67) ஒருகாழென்பது கலித்தொகையிலும்(54) வந்துள்ளன. தலைவன், "இறந்த கெடுதியுமுடையேன்" என்று சொன்னதாக இங்கே கூறியவர், அக்கெடுதியுள் ஒன்றாகிய யானையை அவன் வினாவியதாக, "ஒருவன், வயமா னடித் தேர்வான்போல" (கலித். 37), "செருச்செய் யானை சென்னெறி வினாய்" (அகநா. 82) என்றார். இங்கே, ஏனலிலுள்ள தினையைத் தின்ற யானையை வேடன் கணையினால் துரத்தினானென்றவர், அச்செய்தியைச் சிறிது வேறு படுத்தி, பிடியோடு மேய்ந்த யானையைக் கானவன் கவணாலெறிந்தனனெனவும் (கலித். 41) மேயவரும் யானையின் வரவை ஒற்றியறிந்து கவண்கல்லை வீசினானெனவும் (அகநா. 292) கூறி, அக்கவண்கல், 1"அறுவரை வேங்கையி னொள்வீ சிதறி, ஆசினி மென்பழ மளிந்தவை யுதிராத்தேன்செ யிறாஅ றுளைபடப்போகி, நறுவடி மாவின் பைந்துண ருழக்கிக், குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப், பலவின் பழத்துட் டங்கும்" எனவும், "உடுவுறு கணையிற் போகிச் சாரல், வேங்கை விரியிணர் சிதறித் தேன்சிதையூஉப், பலவின் பழத்துட் டங்கும்" எனவும் நயம்படக் கிளந்தனர். யானையின் முழக்கத்திற்கு உருமேற்றின் முழக்கத்தை உவமை கூறியதுபோல நற்றிணையிலும் உவமித்துள்ளார் (65, 353). மையல்வேழமென்று இங்கே கூறியவர், "மையல் யானையின் மருட்டலு மருட்டினன்" (கலித். 54) என வேறிடத்தும் கூறியுள்ளமை காண்க. தலைவி அருவி நீராடுகையில் நீரோடு சென்றாளாகத் தலைவன் சென்று எடுத்துக் காத்தானென்று இங்கே காணப்படும் செய்தி, "காமர் கடும்புனல் கலந்தெம்மோடாடுவாள், தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலால்,
1பல இலக்குக்களை ஒரே சமயத்திற் றுளைத்துச்செல்லும் அம்பை எய்வதற்குரிய வல்வில்லின் இயல்பு இங்கே நினைவிற்கு வருகிறது. |