பக்கம் எண் :

701
நீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந்த ருளினாற், பூணாக முறத்தழீஇப் போதந்தான்" (39) எனக் கலிப்பாட்டில் இவராற் சுவையுறச் சொல்லப் பட்டிருக்கிறது. பாறை நெடுங்சுனையிலே வீழ்ந்த பல பழங்களில் உண்டான தேனை நீரென்று கருதி உண்ட மயில் தளர்ந்து நின்றதாக இங்கே உணர்த்தியவர், அதனைச் சிறிது வேறுபடுத்தி அத்தகைய தேனை உண்ட ஒரு மந்தி மயங்கிக் கண்படை கொண்டதாக அமைத்து, "கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை, ஊழுறு தீங்கனியுண்ணுநர்த் தடுத்த, சாரற் பலவின் சுளையொ டூழ்படு, பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல், இறியா துண்ட கடுவ னயலது, கறிவளர் சாந்த மேறல்செல்லாது நறுவீயடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்" (அகநா. 2) என்று புனைந்தமை அறிந்து மகிழ்வதட்குரியதாகும், முருகக் கடவுளைத் தொழுது தலைவன் சூளுரைத்தானென்று இங்கே கூறியது போலவே பல விடங்களிற் பலவகையாகச் சூளைப்பற்றிய செய்திகளை அமைத்துள்ளார். ஆம்பலந்தீங்குழலை, "இயவர், தீங்குழ லாம்பலி னினிய விமிரும்" (ஐங்குறு. 215) என்ற விடத்து உவமையாக அமைத்துள்ளார். மேகக் கூட்டங்களுக்கு யானைப் படைகளையும் பறவைகளின் தொகுதிக்கு அரசர்களுடைய படைகளையும் பிற இடங்களில் உவமை கூறிய இவர், இங்கே மேகங்கள் மலையைச் சூழவும் புள்ளினம் தத்தம் இடங்களிற் சேர்ந்து ஒலிப்பவும் வரும் மாலைக்கு, சினைஇய வேந்தன் செல்சமத்தை உவமை கூறுதல் மிக ஏற்புடையதாகும். தலைவனை அன்றையன்ன விருப்போடென்றும் வருபவனாக உணர்த்தியதை, "அன்றையன்ன நட்பினன்" (குறுந். 385) எனவும் உணர்த்துவர். தலைவியின் அழுங் கண்களுக்கு நீரெறிமலரை உவமை கூறும் இவரது இயல்பு, "அதுபுலந்தழுத கண்ணே சாரற், குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை, வண்டு பயில் பல்லிதழ்க் கலைஇத், தண்டுளிக் கேற்ற மலர்போன் றனவே" (குறுந். 291) என்றும், ‘நின்சுனைக், கனைபெய னீலம்போற் கண்பனி யுகுபவால்" (கலித். 48) என்றும், "மலிபெயற் கலித்த மாரிப்பித்திகத்து............. பெயலேர் மணமுகைச், செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கண்" (அகநா. 42) என்றும் வரும் பகுதிகளாலும் அறியப்படுகின்றது. தலைவி நலஞ்செலச் சாய்ந்த செய்தியை, "மணிமருண் மேனி யாய் நலந் தொலைய" (அகநா. 278) என்று வேற்றுருவத்திற் கூறுதல் காண்க. கங்குலில் தலைவன் வருதலையஞ்சித் தலைவி கலுழ்தலை "உரவுமழை பொழிந்த பானாட்கங்குற், றனியை வந்த வாறுநினைந்தல்கலும், பனியொடு கலுழுமிவள் கண்ணே" (அகநா. 182) எனச் சுருக்கிக் கூறியதனை இப்பாட்டில் மிக விரித்துரைத்துரைத்திருத்தல் அறிதற்குரியது. தலைவன் வரும்வழி யிடையில் உள்ள அஞ்சத்தக்க விலங்குகளாக இங்கே கூறியவற்றுள், அளைச்செறியுழுவையின் தன்மையை, "இருண்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி, வரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்" (அகநா. 218) எனவும், முதலையின் தன்மையை, "கான்யாற்றுக், கராஅந் துஞ்சுங் கல்லுயர் மறிசுழி,