பக்கம் எண் :

704
யும் நல்ல ஆபரணங்களையும் வழங்குபவன்' என்றும், தென்னவனை, "பொழிபெயல் வண்மையான்" (கலித், 57) என்றும் சிறப்பித்துப் பாடியிருக்கும் பகுதிகளிலும், இல்லையென்று வந்தாரது குறையை நீக்க முடியாவிடின் உயிரை நீத்தல் வள்ளியோர் செயலென்பதை, ‘இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்காற், றன்மெய் துறப்பான் மலை" "ஈத லிரந்தார்க்கொன் றாற்றாது வாழ்தலிற், சாதலுங் கூடுமா மற்று" (கலித். 43, 61) என்று புலப்படுத்திய அடிகளிலும் கொடையைப் பாராட்டும் இவரது நற்புலமை விளங்குகின்றது.

பாரியோடு உயிர் நண்பராக இருந்து நட்பின் இயல்பை நன்கறிந்த இவர், "புரைய மன்ற புரையோர் கேண்மை", "பெரியோர், நாடி நட்பினல்லது, நட்டு நாடார்" (நற். 1, 33) "நட்டோர்க் கல்லது கண்ணஞ்சலையே" (பதிற். 63), "நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்" (கலித். 43), "பிரிவின் றியைந்த துவரா நட்பின், இருதலைப் புள்ளி னோருயி ரம்மே"(அகநா, 12) என நட்பினைப்பற்றிய செய்திகளை அறிவித்திருத்தல் அவரது அனுபவத்தினின்றெழுந்ததென்றே கூறலாம்.

தலைவியின் உயிர் சிறிது, காமம் பெரிதென்பதைப் பலாவின் சிறுகொம்பிற் பெரியபழம் தூங்குவதை உவமித்து விளக்கியிருத்தல், காமம் கடலினும் பெரிதென்றல், காமம் முதிர்ந்தால் உயிர்க்கு அழிவு நேருமென்றல் முதலியன காமத்தைப் பற்றி இவர் கூறுவனவாகும்.

இவர், தலைவன் தலைவியரிடையே உள்ள அன்பின் வகையைப் புலப்படுத்தும் இடங்கள் பல: ‘தலைவன் இனியனாதலின் அவன் செய்வனயாவும், இனியனவே; அவன் செய்யும் இன்னாமை தேவலோகத்திற் பெறும் இன்பத்தினும் உயர்ந்தது' என்றும், ‘தாய் வீட்டில் இருந்து உண்ணும் தேனோடுகலந்த பாலைக்காட்டிலும் தழைக்குவியலுக்கு அருகே உள்ளதும் மானுண்டு எஞ்சியதுமாகிய நீரை அவனது அருகேயிருந்து பருகுதல் இனியது' என்றும் தலைவி கூறுவதாக அமைத்த பகுதிகள் இன்பத்தை விளைவிப்பனவாகும். கற்பினையுடைய மகளிரை, "காமர் கடவுளு மாளுங் கற்பிற் ...... சேயிழை " (பதிற். 65). "அருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையள்" (கலித். 39) என்பர்,

குறவர்கள் யானைக்கொம்பை விற்று உணவுப் பொருள்களைப் பெறுதலும், வீரர்கள் அக்கொம்பை விற்றுக் கள்ளைவாங்குதலும், கணவனை இழந்த மகளிர் பஞ்சினைப்பன்னி நூற்றலும், மகளிர் தைந்நீராடுதலும், அவர் விளையாட்டிற் பிள்ளையை வளர்த்து வேறொருத்தி வளர்த்த பெண்ணைக் கொள்ளுதற்குச் சிறுசோறு சமைத்து ஆயத்திற்கு இட்டு மகிழ்தலும், தலைவனைப் பிரிந்த மகளிர் அவன் வரும் நாட்களைச் சுவரில் விரலாலெழுதி எண்ணியிருத்தலும், மகளிர் உரலிற் பொருள்களை இடிக்கும் பொழுதுவள்ளைப்பாட்டைப் பாடுதலும், ஒருவன் தானே வலிய இராக்கத மணமுறைபற்றி ஒருத்தியைக் கொள்ளுதலும், நீர்குடித்தும் மெய்தொட்டும் சூளுறவு கூறுதலும், யானையை நீருண்ண விடுகையில் அதனால் வருந்துன்பத்தைத் தடுக்க அதன் வரவை அறிவிக்கும்