தெய்வம், சிவபிரான், திருமால், பலதேவர், பிரமன், வரையரமகளிர் முதலியோர். உபகாரிகள்: அருமன், எவ்வி, கிள்ளிவளவன், குட்டுவன், கோசர், கோதை மார்பன், சோழன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தழும்பன், தித்தன், திதியன், திரையன், பசும்பூட் பாண்டியன், பழையன் மாறன், பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன், பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தன், முசுண்டை, வடுகர் பெருமகன் எருமை, வழுதி, வன்னி, வானவரம்பன். புலவர்கள்: அகத்தியர், கபிலர், தூங்கல், பரணர். ஊர்கள் முதலியன: ஆலங்கானம், இடையாறு, உறையூர், ஊணூர், கருவூர், காவிரிப்பூம்பட்டினம், திருச்சீரலைவாய், திருப்பரங்குன்றம், திருமருதந்துறை, திருவாவினன்குடி, திருவேரகம், தொண்டி, பவத்திரி, பழமுதிர்சோலை, பெருங்குளம், மதுரை, மருங்கூர்ப்பட்டினம், முசிறி, மூதில், வேங்கடம். ஆறுகள்: அயிரியாறு, ஆன்பொருநை, காவிரி, வையை, இவர் பாடிய திருமுருகாற்றுப்படையிலும் நெடுநல்வாடையிலும் உள்ள ஒத்த பகுதிகள்: முருகு. | | நெடுநல். | 38. வென்றடு விறற்கொடி | : | 87, "வென்றெழு கொடி | 70 - 71. திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்துக் ......... கூடல் | : | 89-90, "திருநிலை பெற்ற தீது தீர் சிறப்பின்......திருநகர் | 228. நெய்யோ டையவி யப்பி | : | 86. "ஐயவி யப்பிய நெய்யணிநெடுநிலை | 238. நளிமலைச் சிலம்பு | : | 100. "நளிமலைச் சிலம்பிற் சிலம் புங் கோயில் | திருமுருகாற்றுப்படையிலும் இவரியற்றிய பிறசெய்யுட்களிலும் உள்ள ஒத்த பகுதிகள்: முருகு. 24. திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்: "தேங்கமழ் திருநுதற் றிலகந் தைஇயும்" அகநா.389 35-7. இளமுலை...... விரிமலர் வேங்கை நுண்டா தப்பிக்காண்வர, வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெரியா: "பல்லித ழெதிர்மலர் கிள்ளி வேறுபட, நல்லிள வனமுலை யல்லியொ டப்பியும்" அகநா. 389. 71. மாடமலி மறுகிற்கூடல்: "மாடமலி மறுகிற் கூட லாங்கண்" அகநா. 346. 104. ஆரந்தாழ்ந்த வம்பகட்டு மார்பு: "நெடுவேண் மார்பிலாரம்" அகநா. 120 122. பல் பொறி மஞ்ஞை வெல்கொடி: "மணிமயி லுயரிய மாறாவென்றி" புறநா. 56. |