150-51. பாம்புபடப்புடைக்கும்........புள்ளணி நீள்கொடிச் செல்வன்: "விண்ணுயர் புட் கொடி விறல்வெய் யோனும்" புறநா.56. 151-4. வெள்ளேறு, வலவயி னுயரிய...... செல்வன்: "ஏற்றுவலனுயரிய .........மணிமிடற் றோனும்" புறநா.56. 247. ஓடாப்பூட்கைப் பிணிமுகம்: "பிணிமுக வூர்தி யொண்செய் யோனும்" புறநா. 56. நெடுநல் வாடையிலும் பிறசெய்யுட்களிலும் காணப்படும் ஒப்புமைப் பகுதிகள்: நெடுநல். 9. மந்திகூர: "கூரற் கொக்கு" அகநா. 346 15-8. கொக்கின் மென்பறைத் தொழுதி......கவரக் கயலற லெதிர: "கொக்கின் குறும்பறைச் சேவல், வெள்ளி வேண்டோ டன்னகயல் குறித்து....கடுநீர் நோக்கிப் பைப்பயப், பார்வ லிருக்கும்" அகநா.346. 51, வடவர் தந்த வான்கேழ்வட்டம்: மு. அகநா.340. 88 - 90 குன்றுகுயின்றன்ன......திருநகர்: "வரைகுயின் றன்ன வான்றோய் நெடுநகர்" அகநா. 93. 89 - 90. திருநிலைபெற்ற....திருநகர்: "திருவுடை வியனகர்" நற். 258. 101. யவனர்: புறநா. 56. 161. செல்வனொடு நிலைஇய வுரோகிணி: "மதிநிறைந் தறுமீன் சேரும்" அகநா. 141. 173. வடந்தைத்தண்வளி: "தண்ணென வாடை தூக்கும்" அகநா. 78. 7. மாங்குடி மருதனார்: இவர் மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மாங்குடிகிழாரென்னும் நல்லிசைப் புலவரொருவர் இயற்றிய செய்யுட்கள் கருத்திலும் சொல்லமைதியிலும் இவருடையனவற்றை ஒத்து இருப்பதால் அவரும் இவரும் ஒருவரெனக் கருதப்படுகிறார். கிழாரென்னும் மரபுப் பெயரால் இவர் வேளாண்மரபினரென்பது பெறப்படும். இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது அவைக்களத்து நல்லிசைப் புலவர்களின் தலைவராக வீற்றிருந்தவர். அவனுக்குப் பல்வேறு நிலையாமையை அறிவுறுத்தி இவர் பாடிய மதுரைக் காஞ்சியின் பெருஞ்சிறப்பை யறிந்த யாவரும் இவரைக் காஞ்சிப் புலவன், மதுரைக் காஞ்சிப் புலவன் என்னும் பெயர்களால் வழங்கி வந்தனரென்று தெரிகிறது. பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இவர்பாலுள்ள நன்மதிப்பு, "ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் றலைவ னாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற், புலவர் பாடாது வரைகவென் னிலவரை" (புறநா. 72) என்று அவன் கூறிய வஞ்சினத்தால் விளங்கும். "மழுவா ணெடியோன் றலைவனாக....பெரி |