பக்கம் எண் :

718
நச்சினார்க்கினியர் வரலாறு

1உரைச்சிறப்புப்பாயிரச் செய்யுட்கள்

வெண்பா

2பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும்-சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே.

தொல்காப் பியத்திற் றொகுத்த பொருளனைத்தும்
எல்லார்க்கு மொப்ப வினிதுரைத்தான்-சொல்லார்
மதுரைநச்சி னார்க்கினியன் மாமறையோன் கல்விக்
கதிரின் சுடரெறிப்பக் கண்டு.

ஆசிரியப்பா

பாற்கடல் போலப் பரந்த நன்னெறி
நூற்படு வான்பொரு ணுண்ணிதி னுணர்ந்த
போக்கறு கேள்விப் புலவோர் புலத்தின்
நாற்பொருள் பொதிந்த தூக்கமை யாப்பினைத்

5தேக்கிய சிந்தைய னாகிப் பாற்பட
எழுத்துஞ் சொல்லும் பொருளுமிம் மூன்றும்
இழுக்கற வாய்ந்த வழுக்கிறொல் சீர்த்தித்
தொல்காப் பியமெனுந் தொடுகடற் பரப்பை
மறுவுங் குறைவு மின்றி யென்றும்.
10கலையி னிறைந்த கதிர்மதி யென்ன
நிலையுடை கலத்தி னெடுங்கரை காணாக்
கல்லா மாந்தர் கற்பது வேண்டியும்
நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியும்
உடையிடை யிட்ட காண்டிகை யுரைத்தும்
15ஆன்றோர் புகழ்ந்த வறிவினிற் றெரிந்து

1. இந்தச்சிறப்புப்பாயிரச்செய்யுட்கள் நான்கும் பண்டைக்காலத்தனவே.

2.இந்த வெண்பா, திருவாவடுதுறை யாதீன மடத்துப் புத்தக சாலையிலுள்ள ஒரு பழைய திருக்குறட் பரிமேலழகருரைப் புத்தகத்திறுதியில், "நற்றிணை நல்ல", "முருகுபொருநாறு", "நாலடிநான்மணி" என்னும் வெண்பாக்கள் மூன்றனோடும் எழுதப்பட்டிருந்தது.