பக்கம் எண் :

83
இரண்டாவது
1பொருநராற்றுப்படை


அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
5விளக்கழ லுருவின் விசியுறு பச்சை
யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
யளைவா ழலவன் கண்கண் டன்ன
10துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி
யெண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
யண்ணா வில்லா வமைவரு வறுவாய்ப்

1 பொருநராற்றுப்படைக்கு இந்நூலை மேற்கோளாகக் காட்டினர்; தொல். புறத், சூ. 36, ந.

2. "சாறு - விழா; ‘சாறு....... உறாது' இது பொருநராற்றுப்படை'' (தக்க. 394, உரை)

1 - 2. "கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற், புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டு - கல்லென்னும் ஓசையுண்டாக அழகு பெற்ற திருநாளை வழிப்படுத்திவிட்ட பிற்றைநாள் பொலிவழிந்த இடம் போலத் தனிமை கொண்டு'' (கலித். 5 : 10 - 11, ந.)

3. வேறு புலம் - வேறிடம்,

5. "விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வை'' (சீவக. 559, ந.) என்பதற்கு இவ்வடி மேற்கோள்.

‘வள் - தோல் ; விளக்கழல் ..... பச்சை' (கல். "வள்ளுறை" மயிலேறும். மேற்.)

7. (பி-ம்) ‘ஒழுங்கிய'

8. "பழையதோர் பொல்லம் பொத்திய" (திருவிளை. விறகு. 13)

11. "பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை" (பெரும்பாண். 11)

10 - 11. "கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனையவாணி" (சீவக. 559)

12. "சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்" (பெரும்பாண். 10)