பக்கம் எண் :

690

"குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்

கற்றறிந்த மாந்தர் கடன்

இதுபோலவே யான் செய்யக் கருதிய பிறநூற் பதிப்புக்களையும் நிறைவேற்றுவிக்கும் வண்ணம் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைச் சிந்திக்கின்றேன்.

"பாடுகின்ற பனுவலோர்கள், தேடுகின்ற செல்வமே

நாடுகின்ற ஞானமன்றில், ஆடுகின்ற வழகனே

"சிந்தையன்பு சேரவே, நைந்துநின்னை நாடினேன்

வந்துவந்து ளின்பமே, தந்திரங்கு தாணுவே

(தாயுமானவர் பாடல்)

சங்கப்புலவர் வணக்கம்

"தடவரை முனிவ னீன்ற தமிழ்க்கொழுங் குழவி தன்னைப்

படர்வெயி லுமிழுஞ் சங்கப் பலகையாந் தொட்டி லேற்றி

நடைவர வளர்த்து ஞால நனந்தலை மறுகில் விட்ட

மடனறு புலமை யோரை மனத்தியா நினைத்து மன்றே

(சீகாளத்திப் புராணம்)

"தியாகராஜ விலாசம்

திருவேட்டீசுவரன் பேட்டை

19-8-31

இங்ஙனம்

வே. சாமிநாத ஐயர்