பக்கம் எண் :

722

இவர் சீவகசிந்தாமணிக்கு முதன்முறை ஓருரையெழுதி, அக்காலத்திற் புகழ்பெற்றிருந்த சைனவித்துவான்கள் சிலருக்குக்காட்ட, மற்றைப் பகுதிகள்போலத் தங்கள் சமயக்கொள்கைகள் முறையே அறிந்து எழுதப்படவில்லை யென்றுகூறி அவர்கள் அவ்வுரையை அங்கீகரிக்கவில்லையென்றும் அப்பால் இவர் ஆருகதநூல்கள் பலவற்றையும் அறிந்தோரிடம் முறையே கேட்டறிந்து நலமுற ஆராய்ந்து இரண்டாமுறை உரையெழுதி அவர்களுக்குக் காட்ட அவர்கள் உற்றுநோக்கி மகிழ்ந்து பாராட்டி அதனைஅங்கீகரித்தார்களென்றும் சைனர்களுள்ளும் ஏனையோருள்ளும்கன்னபரம்பரையில் ஒருவரலாறு வழங்குகின்றது.

தொல்காப்பியவுரை முதலியவற்றில்வேதம், வேதாங்க முதலியபல நூல்களிலிருந்தும் அவற்றின்உரைகளிலிருந்தும் பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி விளக்கிப் போகின்றமையாலும் பிறவாற்றாலும் இவரைவடமொழியிலும் பயிற்சியுள்ளவராகச் சொல்லுவதுடன்பலவகையான கலைகளிலும் பயிற்சியுள்ளவரென்று சொல்லுதற்குஇடமுண்டு.

இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர்,ஆளவந்தபிள்ளையாசிரியர் முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக் கூறப்பட்டிருத்தலின் அவர்களுக்கும், திருமுருகாற்றுப்படையுரையில் பரிமேலழகர் கொள்கையை மறுத்திருத்தலின் அவருக்கும்இவர் பிற்காலத்தவரென்று தெரிகின்றது.

தொல்காப்பியவுரை முதலியவற்றில்இவரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ள மேற்கோளமைந்தநூற்பெயர்கள் முதலியவற்றுள் இதுகாறும் விளங்கியவை வருமாறு:-

அகத்தியம்
அகநானூறு
அணியியல்
அவிநயம்
5அறநெறிச்சாரம்
ஆசாரக்கோவை
ஆசிரியமாலை
இராமாயணவெண்பா
இறையனாரகப் பொருள்
10ஏலாதி
ஐங்குறுநூறு
ஐந்திணையெழுபது
ஐந்திணையைம்பது
ஓளவையார்பாடல்
15கடகண்டு
கலித்தொகை
களவழிநாற்பது