221

100. [வாரா தட்ட வாடூன் புழுக்கல்:]

வாராது அட்ட புழுக்கல்-அரியாது ஆக்கின சோற்றை,

எயிற்றியர் (94) பெய்து (96) ஓச்சி(97) தோண்டி (98) ஏற்றி(99) அட்டழுக்கலென முடிக்க.

வாடு ஊன்-உப்புக்கண்டத்தோடே,

101-2. [வாடாத் தும்பை வயவர் பெருமகன், ஒடாத் தானை:] ஓடா தானை வாடா தும்பை வயவர் பெருமகன்-முதுகிடாத படையினையுடைய கெடாத தும்பை சூடின போரைவல்ல வீரருடைய தலைவனாகிய,

102-3.1ஒள் தொழில் கழல் கால் செ வரை நாடன் சென்னியம் எனின்-ஒள்ளிய தொழில்களையுடைத்தாகிய வீரக்கழலணிந்த காலினையுடைய செவ்விய மலைநாட்டையுடையவனுடைய பாணச்சாதியேம் (பி-ம்: பாண்சாதியேம்) என்று கூறுவீராயின்,

104. தெய்வம் மடையின் தேக்கு இலை குவைஇ-தெய்வங்களுக்குச் சேர இட்டுவைத்த பலிபோலே புழுக்கலையும் (100)தேக்கிலையிலே குவிக்கையினாலே,

104-5. [நும், பைதீர் கடும்பொடு பதமிகப் பெருகுவிர்:] பதம்நும் பைதீர் கடும்பொடு மிகப் பெறுகுவிர்-அவ்வுணவை நும்முடைய பசுமைதீர்ந்த சுற்றத்தோடே மிகப் பெறுகுவீர்;

வியன்காட்டியவுகளில் (82)உல்குடைத்தாகிய (81) நெடுநெறியையும் (65) வம்பலர்(76) கழுதைச்சாத்தொடு வழங்கும் (80) உல்குடைப் பெருவழிக் கவலையையும் காத்திருக்கும் (81)வில்லுடை வைப்பின் (82) குரம்பையில் (88)எயிற்றியர் (94) தாங்களட்ட புழுக்கலையும் வாடூனையும் (100) எல்லிடைக்கழியுநர்க்கு ஏமமாகத்(66) தேக்கிலையிலே குவிக்கையினாலே (102)அப்பதத்தைப் (105) பெருமகனாகிய (101) வரைநாடன் சென்னியமெனின் (103)நும்(104) கடும்பொடு மிகப் பெறுகுவிர் (105)எனமுடிக்க.

உல்கு-இரண்டுவழிக்குங் கொள்க.குவைஇயென்னும் செய்தெனெச்சம் காரணகாரியப்பொருட்டு.

106. [மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்:] மயங்கு மான் அடி பொறித்த அதர்மருங்கின்-நீரின்மையின் மயங்கித் திரியும் மானடி அழுந்திக் கிடக்கின்ற வழியிடத்திலே,


1. "ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்" (பதிற். 34:2) என்பதன் உரையில் ‘ஒண்பொறிக் கழற்காலென்றது தாங்கள் செய்த அரிய போர்த்தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழற்காலென்றவாறு' என்றெழுதியுள்ள பகுதி இங்கே உணரற்பாலது.