247

காந்தளென்றதற்கேற்பப் பாம்பணையென மெலித்தார்.

374. 1[வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் :]

வெயில் நுழைபு அறியா பொதும்பர்-ஞாயிற்றின்கதிர் தோன்றிய காலத்தும் படுகின்றகாலத்துமுட்படச் சிறிதும் செல்லுதலறியாத பொதும்பர்,

குயில் நுழை பெரதும்பர்-இலைநெருக்கத்தாலே குயில்கள் நுழைந்து செல்லும் இளமரக்காவில்,

375-6. குறு கால் காஞ்சி சுற்றிய நெடு கொடி பசு இலை குருகின் புன்புறம் வரி பூ-குறிய காலினையுடைய காஞ்சிமரத்தைச் சூழ்ந்த நெடியகொடியினையும் பசிய இலையினையுமுடைய குருக்கத்தியினுடைய புற்கென்ற புறத்தினையும் வரிகளையுமுடைய பூக்கள் உறைப்ப (379) வென்க.

377-8. கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த இழை சூழ்வட்டம் பால் கலந்தவை போல்-கரிதாகிய சட்டியிலே அப்பவாணிகர் பாகுடனே வேண்டுவனகூட்டிச் சேர்க்கப்பட்ட நூல்போலச் சூழ்ந்துகிடக்கின்ற 2அப்பம் பாலிலே கிடந்தவைபோல,

சட்டியிலே கிடந்த அப்பம் பின்பு பாலிலே கிடந்தவைபோலவென்க.

பிடித்த வட்டமென்க.

379. நிழல் தாழ் வார் மணம் நீர்முகத்து 3உறைப்ப-நிறங்கிளர்கின்ற வார்ந்த மணலிடத்துக் குழிகளின்ற நீரிடத்தே மிகவிழும்படி,

உறைப்பவென்றதனைத் துளிப்பவென்றால் ஈண்டு ஒப்பன்மையான் உப்புறைப்ப என்றாற்போலக்கொள்க.

380. புனல் கால் கழீஇய பொழில் தொறும்-நீர் பெருகிய காலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப்போன பொழில்கடோறும்,

என்பதனால், முன்பு நீர்நின்றுபோகலிற் 4பூத்தவென்றார்.

380-82. திரள் கால் சோலை கமுகின் சூழ் வயிறு அன்ன நீலம் பைங்குடம் தொலைச்சி -திரண்ட தண்டினையுடைய சோலையிடத்துநிற்


1 "விரிகதிர்ச் செஞ்ஞாயிற்றின் வெயில்புகாப் பொதும்பர் தோறும்"(சீகாளத்திப். கண்ணப்பச். 66)

2 "அப்பம்-இப்பொழுது இடியப்பமென்று வழங்கும் ஒருவகைச் சிற்றுண்டி.

3 "உறைப்பு மிகுதியைக்குறித்தல்";"ஓது காத லுறைப்பி னெறி நின்றார்" (பெரிய. திருக்கூட்டச்.7)

4 "பூத்தவென்றது குருக்கத்தி பூத்தமையைக் குறித்தபடி.