38

பத்துப்பாட்டு

அழகுபெற்றுத் தோன்றுகின்ற நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதலுறுகின்ற மாலையை வளையவைத்து,

கவினென்னும் பண்படியாகக் கவின்றென்னுந் தொழில் பிறந்தது. கீழ்நீர்: நீர்க்கீழென்னும் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ.

அது மிகச்சிவத்தலின் ஒப்பனைக்குக் கொள்வர். 

30-32. [ துணைத்தக, வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர், நுண்பூ ணாகந் திளைப்ப:] வள் காது துணை தக நிறைந்த பிண்டி ஒள் தளிர் நுண்பூண் ஆகம் திளைப்ப - வளவிய காதிலே தம்மில் ஒத்தற்குப் பொருந்த இட்டுநிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பிடத்தே அசையாநிற்க,

32-5. திண் காழ் நறு குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை தே கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை கொட்டி - திண்ணிய வயிரத்தையுடைய நறிய சந்தனத்தையுரைத்த பொலிவினையுடைய நிறத்தை யுடைத்தாகிய குழம்பை மணநாறுகின்ற மருதம் பூவை அப்பினாலொப்பக் கோங்கினது குவிந்த அரும்பையொத்த இளமுலையிலே யப்பி.

மருதிணர் நிறத்திற்குவமம்.

35-6. விரி மலர் வேங்கை நுண் தாது அப்பி - அவ்வீரம் புலர்வதற்கு முன்னே விரிந்த மலரையுடைய வேங்கைப்பூவினது நுண்ணிய தாதையும் அதன் மேலே அப்பி,

36-7. [காண்வர, வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா:] வெள்ளில் குறுமுறி கிள்ளிபு காண் வர 1தெறியா -விளவினது சிறிய தளிரைக் கிள்ளி அழகுவர ஒருவர்மேல் ஒருவர் தெறித்துத் தப்பாமற் பட்ட பொழுது, 

38-9. [ கோழியோங்கிய வென்றடு விறற்கொடி, வாழிய பெரிதென்றேத்தி:] வென்று அடு விறல் கோழி ஓங்கிய கொடி பெரிது வாழிய என்று ஏத்தி - வஞ்சியாது எதிர்நின்று அடுகின்ற வெற்றியையுடைய கோழிமேலாய் நின்றகொடி நெடுங்காலம் வாழ்வதாகவென்று வாழ்த்தி, 

39-41. [ பலருடன், சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச், சூரா மகளி ராடுஞ் சோலை] சூர் அரமகளிர்2பலருடன் சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்ப பாடி ஆடும் சோலை - கொடுமையையுடைய தெய்வமகளிர் பலருங்கூடிச் சீர்மை விளங்குகின்ற மலையிடமெல்லாம் ஆரவாரிக்கப் பாடி ஆடும் சோலையினையுடைய,


1பிள்ளையார் சீபாதங்களை உள்ளித்தெறித்து (வேறுரை)

2 (பி-ம்.) ‘பலவுடன்' பலவுடன் - பலதோத்திரங்களினாலே (வேறுரை)