490

விரி பூ கோங்கம் - விரிந்த பூக்களையுடைய கோங்கம்பூ,

74. போங்கம் - மஞ்சாடிப்பூ,
திலகம் - மஞ்சாடிமரத்தின் பூ,
தேன் கமழ் பாதிரி - தேனாறும் பாதிரிப்பூ,

75. செருந்தி - செருந்திப்பூ,
1அதிரல் - புனலிப்பூ,
பெரு தண் சண்பகம் - பெரிய குளிர்ந்த சண்பகப்பூ,

76. கரந்தை - நாறுகரந்தை,
குளவி - காட்டுமல்லிகைப்பூ,
கடி கமழ் கலி மா - விரைகமழும் தழைத்த மாம்பூ,

77. தில்லை - தில்லைப்பூ,
பாலை - பாலைப்பூ,
கல் இவர் முல்லை - கல்லிலே படர்ந்த முல்லைப்பூ,

78. குல்லை - கஞ்சங்குல்லைப்பூ,
பிடவம் - பிடவம்பூ,
சிறுமாரோடம் - செங்கருங்காலிப்பூ,

79. வாழை - வாழைப்பூ,
வள்ளி - வள்ளிப்பூ,
நீள் நறு நெய்தல் - நீண்ட நறிய நெய்தற்பூ,

80. தாழை - தெங்கிற்பாளை,
2தளவம் - செம்முல்லைப்பூ,
முள் தாள் தாமரை - முள்ளையுடைத்தாகிய தாளையுடைய தாமரைப்பூ,

81. ஞாழல் - ஞாழற்பூ,
3மௌவல் - மௌவற்பூ,
நறு தண் 4கொகுடி - நறிய குளிர்ந்த கொகுடிப்பூ,

82. சேடல் - 5பவழக்கான் மல்லிகைப்பூ,
செம்மல் - சாதிப்பூ,
சிறுசெங்குரலி - கருந்தாமக்கொடிப்பூ,


1முல்லை. 51 - 2, ந. குறிப்புரையைப் பார்க்க.

2தளவம்: பொருந. 99, ந ; "பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை" (ஐங். 447:2) ; "தளவி னிதன்முட் செந்நனை" (அகநா. 23:3) ; "தளவமும் - செம்முல்லையும்" (சிலப். 13:155, அடியார்.)

3மௌவல் - மல்லிகை விசேடம் : சீவக. 485. .

4கொகுடி - ஒருவகை முல்லை ; "கொகுடி முல்லை" (திருஞா. தே. வடகுரங்காடுதுறை, 1)

5இது பவழமல்லிகை யெனவும் பாரிசாதமெனவும் வழங்கும்.