622

னாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங்கூறாமையிற்சான்றோர் செய்யுட்கு இக்குற்றமுண்டாயினும்கொள்ளாரெனமறுக்க.

146 - 7. தூவல் கலித்த புது முகை ஊன் செத்துஅறியாது எடுத்த புல் புறம் சேவல் - மழையாலேசெருக்கிவளர்ந்த புதிய முகையைத் தசையாகக்கருதிமுகையென்றறியாதேயெடுத்த புற்கென்ற முதுகினையுடையபருத்து,

148. ஊன் அன்மையின் உண்ணாது உகுத்தென- தசையல்லாத படியாலே தின்னாமல் எவற்றையுஞ் சிந்திப்போகட்டதாக,

149 - 50. நெருப்பின் அன்ன பல் இதழ்தாஅய் வெறி களம்கடுக்கும் வியல் அறை தோறும் -நெருப்பினையொத்த பல இதழ்கள் பரந்து வெறியாடுகின்றகளத்தையொக்கும் அகன்ற பாறைகடோறும்,

151. மணம் இல் கமழும் மா மலை சாரல்- மணஞ்செய்த மனை போல மணக்கும் பெரிய மலைப்பக்கத்திற்சிறுகுடி (156) யென்க.

152. தேனினர் கிழங்கினர் ஊன்ஆர் 1வட்டியர் - தேனினையுடையராய்க் கிழங்கினையுடையராய்த்தசைநிறைந்த கடகத்தையுடையராய்,

153. சிறு கண் பன்றி பழுதுளிபோக்கி - சிறிய கண்ணையுடைய பன்றியிற் பழுதானவற்றைப்போக்கிஅதன் தசையையும்,

2 பழுதுளி ; உளி : பகுதிப்பொருள்விகுதி.

154 - 5. [பொருதுதொலை யானைக்கோடுசீ ராகத், தூவொடு மலிந்த காய கானவர் :] தூவொடுமலிந்த பொருது தொலை யானை கோடு சீர் ஆக காய கானவர்- மற்றுள்ள தசைகளோடேநிறைந்த வட்டிகளையும் தம்மிற்பொருதுபட்ட யானையினது கொம்புகள் காவுமரமாகக்காவிக்கொண்டுவந்த கானவருடைய,

156 - 7. செழு பல் யாணர் சிறுகுடி படினேஇரு பெரு ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் - வளவிய பலபுதுவருவாயினையுடைய


தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றைஎவ்வாறு கோடுமெனின், அவைகள்தாம் அகத்துள்ளும்பிறசான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினுமடங்காமைவேறு ஆனந்தவோத்தென்பது ஒன்று செய்தாராயின் அகத்தியமுந்தொல்காப்பியமும் நூலாகவந்த சான்றோர் செய்யுங்குற்றம்வேறுபடாவென்பது " (தொல். உவம. சூ. 37, பேர்.)

1 வட்டி , கடகம் - பனையகணியாற் செய்தபெரிய பெட்டி ; " முள்ளெயிற்றுப் பாண்மக ளின்கெடிறுசொரிந்த, வகன்பெரு வட்டி " (ஐங். 47 : 1 - 2)

2 ' முறையுளி ; உளி : பகுதிப்பொருள்விகுதி' (பெரும்பாண். 462, ந.)