639

ஓதை - காட்டாற்றின்நெடியசுழியிலே வீழ்ந்து அகப்பட்ட தறுகண்மையையுடையயானையினது வலிய சினத்தைத் தணியப்பண்ணிப் பெரியகம்பத்திலேசேர்த்தற்குத் தமதேவற்றொழிலைச் செய்தற்குக்காரணமான 1பேச்சுக்களைப்பேசி அவற்றிலேபயிலப்பண்ணும் பாகருடைய ஆரவாரமும்,

328 - 9. ஒலி கழை தட்டை புடையுநர்புனந்தொறும் கிளி கடி மகளிர் விளி படு பூசல் - ஒலிக்கும்மூங்கிலாற் செய்த 2தட்டையைப் புடைத்துப்புனங்கடோறும் கிளியையோட்டுகின்ற மகளிர்கூப்பிடுதலாற்பிறந்த ஆரவாரமும்,

330. இனத்தின் தீர்ந்த துளங்கு 3இமில்நல் ஏறு - நிரையினின்றும் பெயர்ந்த அசையும் 3குட்டேற்றினையுடையஇடபமும்,

331. மலை தலைவந்த மரையான் கதழ்விடை - எக்காலமும் போர் செய்து போர்த்தொழில்தன்னிடத்திலே கைவந்த மரையானினது விரைந்த ஏறும்,

332 - 5. [ மாறா மைந்தி னூறுபடத் தாக்கிக்,கோவலர் குறவரோடொருங்கியைந் தார்ப்ப, வள்ளிதழ்க்குளவியுங் குறிஞ்சியுங் குழைய, நல்லேறு பொரூஉங் கல்லென்கம்பலை :]

கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்துஆர்ப்ப - முல்லைநிலத்திற் கோவலரும் குறிஞ்சிநிலத்திற்குறவரும் சேரக்கூடி வென்றதன் வெற்றி தோன்ற ஆரவாரிக்கும்படி,

மாறா மைந்தின் ஊறு பட தாக்கி பெரூஉம்கல்லென் கம்பலை - முதுகிடாத வலியுடனே புண்ணுண்டாம்படிமுட்டிப்பொரும் கல்லென்கின்ற ஓசையையுடைய ஆரவாரமும்,

ஏறும் விடையும் ஆர்ப்பப் பொரூஉம்கம்பலை யென்க.

நல் ஏறு வள் இதழ் குளவியும்குறிஞ்சியும் குழைய பொரூஉம் கம்பலை - எருமையேறுகள்வளவிய இதழையுடைய குளவியும் குறிஞ்சியும் வாடும்படிதம்மிற் பொருகின்ற ஆரவாரமும்,

336 - 9. [ காந்தட் டுடுப்பிற் கமழ்மடலோச்சி, வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழ, முண்டுபடுமிச்சிற் காழ்பயன் கொண்மார், கன்றுகடாஅவுறுக்கு மகாஅ ரோதை :]

வள் கோள் பலவின் விளை தீ பழம்சுளை உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார் -வளவிய குலைகளையுடைய பலாவினது முற்றின


1 இப்பேச்சுக்களை, முல்லைப். 35 -குறிப்புரையால் அறியலாம்.

2 தட்டையாவது மூங்கிலைக் குறுக்கேநறுக்கிப் பலவாகப்பிளந்து ஓசையுண்டாகும்படி ஒன்றிலேதட்டுங்கருவி (குறிஞ்சி. 43 - 4, .)

3 இமில் , குட்டேறு - இடபத்தினுடையமுன்முதுகின் மேல் உருண்டு பருத்துத் தோன்றும்ஓருறுப்பு.