640

இனிய பழத்திற்சுளையைவிரும்பினோரெல்லாரும் தின்று கீழ்வீழ்ந்துகிடக்கும்மிகையான பழத்தின் விதையைப் பயன்கோடற்கு,

கன்று காந்தள் துடுப்பின் கமழ்மடல் ஓச்சி கடாவுறுக்கும் மகார் ஓதை - கன்றுகளைப்பிணைத்துக்காந்தளினது துடுப்புப்போலும் கமழுகின்ற மடலாலேயடித்துக்கடாவிடும் பிள்ளைகளுடைய ஆரவராமும்,

340. 1[மழைகண் டன்ன வாலைதொறுஞெரேரென :]

341. [ கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்:] கரும்பின் கழை கண்உடைக்கும் ஏத்தமும் -கரும்பின்கோலைச் சாறுகொள்ளும் ஆலையின் ஓசையும்,

342. தினை குறு மகளிர் இசை படுவள்ளையும் - தினையைக் 2குறுகின்ற மகளிருடையஇசைமிகுகின்ற 3 வள்ளைப்பாட்டும்,

343 - 4. சேம்பும் மஞ்சளும் ஓம்பினர்காப்போர் 4 பன்றி பறையும் - சேம்பையும்மஞ்சளையும் விதைத்து வளர்ந்தபின்பு பன்றி கிழங்குஅகழாமற் காப்போருடைய பன்றிக்குக் கொட்டும்பறையோசையும்,

குன்று அகம் சிலம்பும் - இவ்வோசைகளால்மலையிடத்தெழும் எதிரொலியும்,

345. என்ற இவ்வனைத்தும் - என்றுயான்கூறிய இவ்வெல்லா ஓசைகளும்,

345- [ இயைந்தொருங் கீண்டி :]ஒருங்கு இயைந்து ஈண்டி - சேரப்பொருந்தித் திரளப்பட்டு,

346. [ அவலவு மிசையவுந் துவன்றிப்பலவுடன் :] அவலவும் மிசையவும் பல உடன் துவன்றி - தாழ்வரையிலுள்ளனவும்உச்சிமலையிலுள்ளனவுமாகிய ஒழிந்த பல ஓசைகளும் சேரநெருங்குகையினாலே,

347 - 8. [ அலகைத் தவிர்த்த வெண்ணருந்திறந்த, மலைபடு கடாஅ மாதிரத் தியம்ப :] எண் அரு திறத்தஅலகை தவிர்த்த மலை படு கடாம் மாதிரத்து இயம்ப -எண்ணுதற்கு அரிதாகிய கூறுபாட்டையுடையவாகையினாலேஎண்ணையொழிந்த 5மலைகளாகிய யானைக்கு உண்டாகின்றவொலிதிசைகளெல்லாமொலிப்ப,

கடாம், ஆகுபெயராய் அதனாற்பிறந்தஓசையையுணர்த்திற்று.

வரிநிழலிருப்பின் (290) இன்னிசையும்(296) பூசலும் (299) அழுகையும் (301) பாடலும் (304) பூசலும் (306)குரலும் (310) பூச


1 இதற்கு உரை கிடைத்திலது ; மேகத்தைக்கண்டாலொத்த கொட்டில்கள்தோறும் விரைவாக வென்க; ஆலை : ஆகுபெயர் ; (பெரும்பாண். 260 - 61, .)

2 குறுகின்ற - குத்துகின்ற.

3 வள்ளைப்பாட்டு - உலக்கைப்பாட்டு.

4 இது குடப்பறையெனவும் வழங்கும் ;"பன்றிப் பறையே குடப்பறை யாகும்" (பிங்கல.1518)

5 மலைபடு. 572, குறிப்புரை.