| பத்துப்பாட்டு |  | வரைமந்தி கழிமூழ்கக் |  | 225 | கழிநாரை வரையிறுப்பத் தண்வைப்பினா னாடுகுழீஇ
 மண்மருங்கினான் மறுவின்றி
 யொருகுடையா னொன்றுகூறப்
 பெரிதாண்ட பெருங்கேண்மை
 |  | 230 | யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ லன்னோன் வாழி வெனவேற் குருசில்
 மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மா
 ணெல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
 குல்லை கரியவுங் கோடெரி நைப்பவு
 |  | 235 | மருவி மாமலை நிழத்தவு மற்றக் கருவி வானங் கடற்கோண் மறப்பவும்
 பெருவற னாகிய பண்பில் காலையு
 நறையு நரந்தமு மகிலு மாரமுந்
 துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
 |  | 240 | நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும் புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
 கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
 சூடுகோ டாகப் பிறக்கி நாடொறுங்
 குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
 | 
   
 226.  (பி-ம்.) ‘நாடு கெழீஇ' 231.  (பி-ம்.) ‘வெல்வேற் குரிசில்' 234. "பரந்துபடு கூரெரி கான நைப்ப, மரந்தீ யுற்ற" (நற். 177 : 1 - 2)  236. கருவி வானம் : "கருவி வானங் கான்ற" (சீவக. 725) 238 - 41. "நறுவீ நாகமு மகிலு மாரமும், துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய, பொருபுன றரூஉம் போக்கரு மரபின்" (சிறுபாண். 116 - 8) "கொடுவாய்க்குயம் - கோடின வாயையுடைய அரிவாள்; ‘கூனி ........... அரிந்து' என்றார் பொருநராற்றுப்படையிலும்" (சிலப். 16 : 30, அடியார்.) 243. "வயங்கொள்வார் சாலிச் சூடும் வளர்ந்துபோய் வானைச் சூடும்" (திருவால. திருநகர. 9) 244. "குடகாற் றெறிந்த குப்பை வடபாற், செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றும்" (பெரும்பாண். 240 - 41) |