2 - பொருநராற்றுப்படை 245 | கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ் சாலி நெல்லின் சிறைகொள் வேலி யாயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கு நாடுகிழ வோனே. |
246-7. "வேலி யாயிரம் விளைகநின் வயலே" (புறநா. 391 : 21); "வாலி தாமுளை யொருபுறம் வளர்செறு வொருசார், பாலி னெல்லொரு சாரொரு சாரரிப் பறம்பு, சாலி வேலையோர் சாரிவை தலைமயக் குறலால், வேலி யாயிரம் விளையுளென் பதுமிதன் மேற்றே" (சீகாழித். திருநகரப். 9) தெரிநிலையுடன் கூடிய டகரவுகரம் தொழிலடியாக வந்ததற்கு மேற்கோள் (தொல். வினை. சூ. 34, ந.); "தாங்காவிளையுள் - நிலம் பொறாத விளைத்தல்; ‘வேலி ............. ஆக' என்றாராகலின். விளைத்த லென்பது விளையுளென மருவிற்று; புலிப்பாய்த்துள், தேரைப் பாய்த்து ளென்பன போல" (சிலப். 6 : 30, அடியார்.) 248. "காவிரி புரக்கு நாடுகிழ வோற்கென்று" (சிலப். 27 : 171); "கங்கை புரக்கு நாடுகிழவோன்" (பாகவதம். 10. 20 : 7) நன். சூ, 182. மயிலை. மேற்; நன் - வி. சூ. 183, மேற்., இ-வி. சூ. 102, மேற்.
இதன் பொருள் 1. அறாஅ யாணர் அகல் தலை பேர் ஊர் - இடையறாத செல்வ வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,; 2. சாறு கழி வழி நாள் சோறு நசை உறாது - விழாக்கழிந்த பின்னாளில் ஆண்டுப் பெறுகின்ற சோற்றை விரும்புதல் செய்யாது,; 3. வேறு புலம் முன்னிய விரகு அறிபொருந - விழாக்கொண்டாடும் வேற்றுப்புலத்தைக் கருதிய 1விரகையறிந்த பொருந, இஃது அண்மைவிளி. 4. குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் - மான் குளம்பு அழுத்திய இடத்தையொத்த இரண்டருகும் தாழ்ந்து நடுவுயர்ந்த பத்தலினையும்,; 5. விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை - விளக்கினது எரிகின்ற நிறத்தையுடைய விசித்துப் போர்த்தலுற்ற தோல் 6. எய்யா இள சூல் செய்யோள் அ வயிறு - மிக அறியப்படாத இளைய சூலையுடைய சிவந்த நிறத்தையுடையோளது அழகினையுடைய வயிறின்
1 விரகு - உபாயம்; ‘ உபாயங்களாற் பண்ணுதலின் விரகென்றார் ' (பொருந. 107 - 8, ந.)
|